தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சகாப்தம் மனோரமா. ரசிகர்களால் அன்புடன் ஆச்சி என்று அழைக்கப்பட்ட மனோரமாவின் சாதனைகள் பிரம்மாண்டமானது. உள்ளூர் நாடக குழுவில் மேடையேறிய நம்பிக்கையில் ரயில் ஏறிய மனோரமா, 1500 படங்களில் கலக்கி விட்டார் என்றால் நம்ப முடிகிறதா?. சின்ன சின்ன வேடங்களில் நடிக்க ஆரம்பித்த மனோரமா காமெடி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜியில் ஆரம்பித்து அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் வரை நடித்துவிட்டார். இடையில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி உள்ளிட்டோருடனும் நடித்துள்ளார். 5 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைக்கு சொந்தகாரி ஆச்சி மட்டுமே. 1937ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி பிறந்த ஆச்சி மனோரமா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நாளில் சாதனை பெண்மணி மனோரமாவின் காணக்கிடைக்காத புகைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.