Web Designing and Social Media Marketing Training
தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெப் டிசைனிங் மாற்றும் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் பயற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் விருப்பமுள்ள தொழில்முனைவோர் கலந்துகொண்டு பயன் அடையலாம்.
Web Designing Training
இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பின்போது உங்கள் தொழில் குறித்து சமூக வலைத்தளங்களில் மார்க்கெட்டிங் செய்வது, உங்கள் தொழிலுக்கான இணையதளத்தை வடிவமைப்பு குறித்து துறைசார்ந்த நிபுணரகள் கற்றுத் தருவார்கள்.
Social Media Marketing Training
சமூக வலைத்தளங்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்களைக் கவர என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பயிற்சியில் கற்றுகொள்ளளலாம். பிசினஸ் பக்கத்தை உருவாக்குதல், விளம்பரப் பதிவுகளைத் தயாரித்தல் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக கற்றுத்தரப்படும். பிரத்யேகமான இணையதளம் ஒன்றை உருவாக்குவதற்காக வெப் டிசைனிங் பயிற்சியும் வழங்கப்படும்.
Training for Entrepreneurs
குறைந்தது 18 வயதான அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இந்தப் பயிற்சிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு மிகவும் குறைந்த கட்டணம் செலுத்தினால் போதும். முன்பதிவு செய்தவர்களுக்கு ஏசியுடன் தங்குமிட வசதியும் கிடைக்கும். எனவே, சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்து கலந்துகொள்ளலாம்.
Online Business
இந்த வெப் டிசைனிங் மாற்றும் சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் பயற்சி முகாம் சென்னையில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வைத்து, வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும். இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வகுப்புகள் இருக்கும்.
TN Govt Schemes
பயிற்சி முகாம் நடக்கும் இடம்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்சாலை எஸ்டேட், தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனம் அலுவலக சாலை, கிண்டி, சென்னை - 6000032. இந்த முகாம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு 8668100181 / 9841336033 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது https://www.editn.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.