
அரசு வேலைக்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்ற கனவுடன் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இத்தகைய இளைஞர்கள் பயனளிக்கும்விதமாக மத்திய அர்சு நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காப்பீட்டு நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (ஜிஐசி) (General Corporation of India - GIC) உதவி மேலாளர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்காக அறிவிப்பு செய்துள்ளது. மொத்தம் 110 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வித்தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவாக காண்போம்.
என்னென்ன பணியிடங்கள்?
* உதவி மேலாளர் (பொது) பதவிக்கு 18 காலியிடங்கள் உள்ளன.
* லீகல் பதவிக்கு 9 காலியிடங்களும், மனித வளம் (HR) பதவிக்கு 6 காலியிடங்களும் உள்ளன.
* என்ஜினியரிங் பதவிக்கு மரைன், ஏரோநெட்டிக்கல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் ஆகிய பிரிவுகளில் தலா 1 காலியிடங்கள் என மொத்தம் 5 காலியிடங்கள் உள்ளன.
* நிதி பிரிவில் 18 காலியிடங்களும், காப்பீடு பிரிவில் 20 காலியிடங்களும் உள்ளன.
* இதேபோல் காப்பீட்டு தொகை கணக்கிடுபவர் பதவிக்கு 2 காலியிடங்களும், மெடிக்கல் பிரிவில் 2 காலியிடங்களும் உள்ளன.
* கடைசியாக ஐடி பிரிவில் 22 காலியிடங்களும், காப்பீடு பிரிவில் 20 காலியிடங்களும் உள்ளன.
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; ஐசிஎஃப் தொழிற்சாலையில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!
கல்வித்தகுதி என்னென்ன?
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மனித வளம் பணிக்கு ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் HRM / பணியாளர் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். கட்டாயம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். நிதி பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை, MBA/CFA / CA / CMA ஆகிவயற்றில் தேர்ச்சி பெற்ற்றிருப்பது அவசியமாகும்.
தேர்வு நடைமுறை, வயது வரம்பு என்ன?
மேற்கண்ட பதவிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, குரூப் டிஸ்கசன், நேர்முகத்தேர்வு மற்றும் மெடிக்கல் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம் ரூ.1,000 ஆகும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயதும் அதிகப்பட்சம் 30 வயதும் இருக்கலாம். விண்ணப்பத்தாரர் 2.11.1994 தேதிக்கு முன்பும், 1.11. 2003 தேதிக்கு பின்பும் பிறந்திருக்கக்கூடாது.
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது தளர்வு உண்டு.
எவ்வளவு சம்பளம்?
உதவி மேலாளராக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் கிடைக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதரர்கள் https://ibpsonline.ibps.in/gicionov24/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 19.12.2024 ஆகும். ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி 05.01.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதி பின்னர் மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு https://www.gicre.in/en/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
பேங்கில் காத்திருக்கும் வாட்ச்மேன் வேலை; இன்னும் 5 நாள் தான் இருக்கு!