எல்ஐசி ஸ்கார்லர்ஷிப்: ஆண்டுதோறும் ரூ.40,000 வரை கிடைக்கும்! உடனே அப்ளை பண்ணுங்க!!

Published : Dec 10, 2024, 11:39 PM IST

LIC Scholarship 2024: எல்ஐசி (LIC) பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப்  (LIC Golden Jubilee Scholarship Scheme 2024) வழங்குகிறது. இதற்கு டிசம்பர் 22, 2024 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

PREV
110
எல்ஐசி ஸ்கார்லர்ஷிப்: ஆண்டுதோறும் ரூ.40,000 வரை கிடைக்கும்! உடனே அப்ளை பண்ணுங்க!!
LIC Golden Jubilee Scholarship Scheme 2024

எல்ஐசி (LIC) என அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டம் 2024 (LIC Golden Jubilee Scholarship Scheme 2024) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 22, 2024.

210
LIC Golden Jubilee Scholarship Amount

அரசு அல்லது தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் இந்த LIC கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டம் 2024 க்கு விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்புக்குப் பிறகு ஒருங்கிணைந்த படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கும் கிடைக்கும். தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்த தொழிற்கல்வி படிப்புகளுக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும்.

310
LIC Golden Jubilee Scholarship Scheme 2024 categories

எல்ஐசி கோல்டன் ஜூபிலி ஸ்காலர்ஷிப் திட்டம் இரண்டு வகைகளாக இருக்கும். பொது உதவித்தொகை, பெண் குழந்தைகளுக்கான சிறப்பு உதவித்தொகை என இரு பிரிவுகளில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

410
LIC Golden Jubilee Scholarship Scheme 2024 eligibility

இந்த உதவித்தொகைக்குத் தகுதிபெற 2021-22, 2022-23, 2023-24 ஆகிய கல்வி ஆண்டுகளில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்ணு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

510
LIC Golden Jubilee Scholarship Scheme 2024 Application

சில நிபந்தனைகளுக்கு உட்பட தேர்வாகும் மாணவ மாணவிகளுக்கு படிப்பின் முழு காலத்திற்கும் உதவித்தொகை கிடைக்கும். பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்பு உதவித்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அதற்குப் பிறகும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், உதவித்தொகை புதுப்பிக்கப்படும்.

610
LIC Golden Jubilee Scholarship for Medical Courses

பொது உதவித்தொகை பிரிவில், மருத்துவத் துறையில் MBBS, BAMS, BHMS, BDS படிப்பில் சேரும் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 40,000/- வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ரூ. 20000/- வீதம் இரண்டு தவணைகளில் இந்தத் தொகை கிடைக்கும்.

710
LIC Golden Jubilee Scholarship for Engineering Courses

பொது உதவித்தொகை பிரிவில், BE, BTECH, BArch போன்ற பொறியியல் உயர் கல்வியைத் தொடரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 30,000/- வழங்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ. 15000/- என இரண்டு தவணைகளில் செலுத்தப்படும்.

810
LIC Scholarship for Integrated Courses and ITI

பொது உதவித்தொகை பிரிவில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்பு அல்லது அதற்கு இணையான பிற படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000/- வழங்கப்படும். தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITIs) படிப்பதற்கும் இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்கும். ரூ. 10000/- வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும்.

910
LIC Special scholarship for girl students

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் உள்ள பட்டப்படிப்புகள், தொழில்பயிற்சி நிறுவனங்களில் உள்ள டிப்ளமோ ITI படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கு சிறப்பு உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.15,000/- வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில் தலா ரூ.7500/- கிடைக்கும்.

1010
How to apply for LIC Golden Jubilee Scholarship Scheme 2024

எல்ஐசி கோல்டன் ஜீபிலி ஸ்காலர்ஷிப் திட்டம் 2024 ( LIC Golden Jubilee Scholarship Scheme 2024) க்கு விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் ஆன்லைனில் https://licindia.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவுசெய்யலாம். இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 22, 2024.

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பப் பதிவுக்கான ஒப்புகை கிடைக்கும்.

click me!

Recommended Stories