அமெரிக்காவுல படிக்க ஆசையா? காசு இல்லன்னு கவலைப்படாதீங்க.. இதோ 100% ஸ்காலர்ஷிப் தர்ற டாப் 5 காலேஜ்!

Published : Jan 13, 2026, 11:10 PM IST

அமெரிக்கக் கல்வி கனவை நனவாக்க, சில முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு 100% கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன. 5 முக்கிய பல்கலைக்கழகங்கள் வழங்கும் முழு நிதி உதவித் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
17
100% கல்வி உதவித்தொகை

உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் சிறந்த வேலைவாய்ப்புக்காக சர்வதேச மாணவர்கள் பலரின் கனவு தேசமாக அமெரிக்கா உள்ளது. ஆனால், அங்குள்ள அதிகப்படியான கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவு பலருக்குத் தடையாக இருக்கிறது.

இந்தத் தடையை நீக்கும் வகையில், சில முன்னணி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு 100% கல்வி உதவித்தொகையை (Fully Funded Scholarships) வழங்குகின்றன. அத்தகைய வாய்ப்புகளை வழங்கும் 5 முக்கிய பல்கலைக்கழகங்கள் இதோ…

27
1. யுனிவர்சிட்டி ஆஃப் செயின்ட் தாமஸ், மினசோட்டா

இந்தப்பல்கலைக்கழகம் வணிகம் (Business), பொறியியல் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் சிறந்த படிப்புகளை வழங்குகிறது.

• GHR Fellows திட்டம்: வணிகத் துறையில் (Business major) சேர விரும்பும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் இது வழங்குகிறது. மேலும், இதில் தலைமைத்துவப் பயிற்சி மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியுதவியும் உண்டு.

• Schulze Innovation ஸ்காலர்ஷிப்: தொழில்முனைவோர் (Entrepreneurship) ஆக விரும்பும் மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளிப்படிப்பில் 3.5-க்கு மேல் GPA பெற்றிருப்பது அவசியம்.

37
2. மிச்சிகன் பல்கலைக்கழகம்-டியர்போர்ன்

பொறியியல், கணினி அறிவியல் மற்றும் வணிகத் துறையில் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளுக்கு இப்பல்கலைக்கழகம் முன்னுரிமை அளிக்கிறது.

இங்கு ஒவ்வொரு துறைக்கும் (Colleges) தனித்தனியான நிதி உதவித் திட்டங்கள் உள்ளன. கலை, அறிவியல், வணிகம் மற்றும் பொறியியல் துறைகளில் சேரும் மாணவர்கள் அந்தந்தத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

47
3. கார்னெல் பல்கலைக்கழகம்

ஆராய்ச்சி மாணவர்களுக்கு (PhD) இப்பல்கலைக்கழகம் ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம்.

இங்கு பிஎச்டி (PhD) சேரும் மாணவர்களுக்கு 100% நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் கல்விக் கட்டணம், மருத்துவக் காப்பீடு மற்றும் தங்குவதற்கான மாதாந்திர உதவித்தொகை (Stipend) ஆகியவை அடங்கும்.

முதுகலை (Master's) படிப்புகளுக்கு நிதி உதவி சற்று குறைவாக இருந்தாலும், சில துறைகளில் பகுதியளவு உதவித்தொகை (Partial funding) வழங்கப்படுகிறது.

57
4. வெஸ்ட் வர்ஜீனியா யுனிவர்சிட்டி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி

தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைப் பயிற்சிகளுக்கு இப்பல்கலைக்கழகம் பெயர் பெற்றது.

திறமையான மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் (Merit-based) கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பொறியியல் மற்றும் வணிகத் துறை மாணவர்களுக்கு இங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

67
5. நோட்ரே டேம் பல்கலைக்கழகம்

மாணவர்களின் நிதித் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதில் இப்பல்கலைக்கழகம் தனித்துவமானது.

மாணவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது குடும்ப நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தேவையான 100% நிதி உதவியை இப்பல்கலைக்கழகமே வழங்குகிறது. இதில் மானியங்கள் (Grants) மற்றும் வளாகப் பணிகளும் (Campus employment) அடங்கும்.

77
கவனிக்க வேண்டியவை

1. ஆங்கிலப் புலமை: பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் TOEFL அல்லது IELTS போன்ற தேர்வுகளை எதிர்பார்க்கின்றன.

2. முன்கூட்டியே விண்ணப்பித்தல்: உதவித்தொகைக்கான இடங்கள் குறைவு என்பதால், சேர்க்கை தொடங்குவதற்கு 6-8 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிப்பது நல்லது.

3. இணையதளம்: ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் தகுதி மற்றும் காலக்கெடு (Deadlines) குறித்த விவரங்களைச் சரிபார்க்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories