பாதுகாப்புத் துறையில் அதிகாரி பதவியில் சேரும் அனைவருக்கும் ஆரம்ப நிலை சம்பளம் Level 10 – ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படும். இதற்கு கூடுதலாக HRA, மருத்துவ சலுகைகள், போக்குவரத்து அலவன்ஸ், பதவி உயர்வு அடிப்படையிலான சம்பள உயர்வு போன்ற பல நலன்களும் உண்டு. பொருளாதார ரீதியாகவும், சேவை மரியாதை ரீதியாகவும் இது ஒரு சிறந்த வேலைவாய்ப்பு.
தேர்வு முறை (Selection Process)
UPSC CDS தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலில் எழுத்துத் தேர்வு, பின்னர் SSB வழியாக Intelligence & Personality Test நடைபெறும். தேர்வு மையங்கள் தமிழ்நாட்டில் Chennai, Coimbatore, Madurai, Trichy, Vellore ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே SSB நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவினர் மற்றும் பிற பிரிவினருக்கு ₹100 ஆகும். SC/ST மற்றும் அனைத்து பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை. கட்டணம் ஆன்லைனில் Net Banking, Debit/Credit Card வழியாக செலுத்த முடியும்.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்க, UPSC இணையதளம் https://upsc.gov.in சென்று CDS-I 2026 தேர்வு லிங்க் தேர்வு செய்ய வேண்டும். அங்கு Online Application Form நிரப்பி, தேவையான ஆவணங்களை upload செய்து, கட்டணம் செலுத்தி Submit செய்ய வேண்டும். விண்ணப்பம் சரியாக அனுப்பப்பட்டதா என்பதை உறுதி செய்ய acknowledgment copy-ஐ சேமித்துக் கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள் (Important Dates)
- கடைசி தேதி: 30.12.2025
- எழுத்துத் தேர்வு தேதி: 12.04.2026