TN TRB Assistant Professor தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது. டிசம்பர் 27 அன்று தேர்வு நடைபெற உள்ளது. பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டிருந்தது. இந்த 2025-ம் ஆண்டிற்கான உதவிப் பேராசிரியர் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 27-ம் தேதி (27.12.2025) அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெற உள்ளது என்று வாரியம் அறிவித்துள்ளது.
26
ஹால் டிக்கெட் வெளியீடு
இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இன்று (11.12.2025) முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
36
பதிவிறக்கம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in/ என்ற முகவரிக்குச் செல்ல வேண்டும். அங்கு தங்களுக்கான User ID மற்றும் Password (கடவுச்சொல்) ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் அல்லது ஐயங்கள் இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அமைக்கப்பட்டுள்ள குறைதீர் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
56
தேர்வு மையங்கள் விவரம்
இந்தத் தேர்வானது தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில், மொத்தம் 195 மையங்களில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்வருக்கும் ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் குறித்த முழுமையான விவரங்கள் அவர்களது நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
66
முக்கிய அறிவுறுத்தல்
தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களை மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே, தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களிலேயே தேர்வினை எழுத வேண்டும்.