Training: மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம் வேண்டுமா.?! இந்த இலவச பயிற்சியில் பங்கேற்றால் போதும்.!

Published : Mar 28, 2026, 09:33 AM IST

பெரம்பலூரில் பெண்களுக்கு தையல் மற்றும் அழகு கலைகளில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் உணவு, அரசு சான்றிதழுடன், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் பெற வழிகாட்டுதலும் அளிக்கப்பட்டு, மாதந்தோறும் நல்ல வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது.

PREV
15
நீங்களும் ஆகலாம் பிஸ்னஸ் மேக்னெட்

இன்றைய காலத்தில் வேலை தேடி அலைவதற்குப் பதிலாக, சுயதொழில் தொடங்கி நிலையான வருமானத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களிடம்  அதிகரித்து வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஆதரவாக நிற்க முயற்சிக்கிறார்கள். ஆனால் சரியான பயிற்சி, வழிகாட்டுதல், முதலீட்டு ஆதரவு ஆகியவை இல்லாததால் பலரின் கனவு பாதியிலேயே  காணாமல்  போகிறது. இப்படிப்பட்ட சூழலில், இலவசமாக திறமைகளை கற்றுக்கொடுத்து, தொழில் தொடங்க வழிகாட்டும் பயிற்சி மையங்கள் உண்மையிலேயே பெரிய வாய்ப்பாக மாறுகின்றன.

25
பயிற்சி.! ஆமாம் இலவச பயிற்சி.!

தையல் பயிற்சி 31 நாட்களும் அழகு கலை பயிற்சி 35 நாட்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில்  பங்கேற்பவர்கள் காலை மற்றும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படும் என்பது முக்கிய அம்சமாகும். ஒரே மாதத்தில் எல்லா வியாபார விஷயங்களும் கற்றுக்கொடுக்கப்படுவதால் நீங்கள் உடனே தொழில் தொடங்கலாம்.

35
கடன் பெறுவதற்கு வழிகாட்டப்படும்

பயிற்சி மட்டுமல்லாமல் அதன் பிறகு என்ன செய்யலாம் என்பது குறித்தும் பெண்களுக்கு வழிகாட்டப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் திறமைகளை கற்றுக்கொண்ட பெண்களுக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்படும். இதன் மூலம் தையல் கடை அல்லது பியூட்டி பார்லர் போன்ற சுயதொழில்களை தொடங்கி, மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பும் உருவாகிறது. குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த விரும்பும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும். கடின உழைப்பும், கொஞ்சம் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் வருமானத்தை மேலும் அதிகரிக்கலாம்.

45
உடனே அப்ளை செய்ய வேண்டும்

இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் பெரம்பலூரில் உள்ள பயிற்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். தங்களின் எதிர்காலத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் 04328 - 277896, 8489065899, 9488840328 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

55
குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்

மொத்தத்தில், தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்ற விரும்பும் பெண்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். Indian Overseas Bank வழங்கும் இந்த இலவச பயிற்சி மூலம் திறமையை வளர்த்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் சுயதொழிலை தொடங்க முடியும். குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறும் பாதையை இது திறந்து வைக்கிறது. சரியான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு கிடைக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டால், குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வதோடு, சமூகத்தில் ஒரு முன்னுதாரணமாகவும் மாறலாம். இன்று எடுத்த ஒரு சிறிய முடிவு, நாளைய பெரிய வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories