வெளிநாட்டு படிப்பு, வேலை வாய்ப்பு... இன்னைக்கு நிறைய இந்திய இளைஞர்களோட கனவு இதுதான்! எந்த நாட்டுல என்ன மாதிரி படிப்பு, வேலை வாய்ப்பு இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உட்பட இந்திய மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் 10 நாடுகளைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க!
இன்னைக்கு நிறைய இளைஞர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு போகணும்னு ஆசைப்படுறாங்க. இன்ஜினியரிங் இல்லன்னா வேற டிகிரி முடிச்சதும், உடனே வெளிநாடு பறக்க ரெடியா இருக்காங்க. படிச்சு முடிச்சு அங்கேயே செட்டில் ஆகணும்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. நம்ம தமிழ்நாட்டுல இருந்து கூட வருஷா வருஷம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடு போறாங்க.
213
இந்திய மாணவர்கள்
தெரிஞ்சு போனா ஈஸி!
சில மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாம வெளிநாடு போயிட்டு கஷ்டப்படுறாங்க. அதனால எந்த நாட்டுக்கு போறோம்? அங்க என்ன வசதிகள் இருக்கு? என்ன கல்வி நிறுவனங்கள் இருக்கு? எப்படி ஸ்டூடண்ட் அட்மிஷன் நடக்குது? எந்த பிரச்சனையும் இல்லாம எப்படி படிக்கிறது? படிச்சு முடிச்சதும் எப்படி வேலை வாய்ப்புகள் இருக்கு? இதெல்லாம் தெரிஞ்சு போறது நல்லது.
313
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
இந்தியர்கள் இருக்கும் நாடுகள்!
இதுவரைக்கும் இந்தியர்கள் சில நாடுகள்ல உயர்கல்வி முடிச்சு எந்த பிரச்சனையும் இல்லாம வேலை செஞ்சுட்டு இருக்காங்க. முதல் தடவையா வெளிநாடு போகணும்னு நினைக்கிற மாணவர்கள் இந்த மாதிரி நாடுகளை தேர்வு செய்றது நல்லது. ஏற்கனவே நம்ம மக்கள் அங்க இருக்கறதால பிரச்சனைகளை தீர்க்க உதவி கிடைக்கும். அதனால உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு போறவங்க இந்த 10 நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
413
அமெரிக்கா
அமெரிக்கா america:
இந்திய மாணவர்களின் கனவு நாடு. ஹார்வர்ட், ஸ்டான்போர்ட் மாதிரி பிரபலமான பல்கலைக்கழகங்கள்ல படிக்கணும்னு ஆசை. உலகிலேயே சக்தி வாய்ந்த கரன்சி இருக்கற அமெரிக்காவுல வேலை கிடைச்சா பொருளாதார நிலை மேம்படும்னு நம்புறாங்க. படிக்கும்போது பார்ட் டைம் வேலை செய்யலாம். படிச்சு முடிச்சதும் வேலை செஞ்சு அங்கேயே செட்டில் ஆகலாம்.
513
ஜெர்மனி
ஜெர்மனி germany:
நிறைய இந்தியர்கள் இருக்கற நாடுகள்ல இதுவும் ஒண்ணு. இன்ஜினியரிங், ஐடி, சயின்ஸ் துறைகள்ல திறமையான நிபுணர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கு. உயர்கல்விக்கு போற மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரொம்ப குறைவு. ஜெர்மனி பொருளாதார ரீதியா ரொம்ப வலுவான நாடு.
613
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா australia:
உலகத்துல நல்ல பல்கலைக்கழகங்கள் இருக்கற நாடுகள்ல இதுவும் ஒண்ணு. நல்ல வாழ்க்கை முறை இருக்கறதால நிறைய பேர் இங்க செட்டில் ஆகணும்னு நினைக்கிறாங்க.
713
கனடா
கனடா canada:
மத்த நாடுகளை விட கனடா போறது ரொம்ப ஈஸி. இமிகிரேஷன் ப்ராசஸ் ரொம்ப ஈஸியா முடிஞ்சுடும். திறமையான தொழிலாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இந்த நாடு ரெடியா இருக்கு.
813
யுனைடெட் கிங்டம்
பிரிட்டன் britain
உயர்கல்வியில உலகளாவிய தலைவர். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மாதிரி உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இருக்கு. படிச்சு முடிச்சதும் வேலை செய்யலாம்.
913
சிங்கப்பூர்
சிங்கப்பூர் singapore:
சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதி மையமா மாறிடுச்சு. வலுவான பொருளாதாரம் இருக்கு. மத்த வளர்ந்த நாடுகளை விட இங்க வேலை கிடைக்கிறது ஈஸி.
1013
நெதர்லாந்து
நெதர்லாந்து netherlands:
தரமான கல்வி கிடைக்குது. நிறைய பல்கலைக்கழகங்கள்ல முழுசா ஆங்கிலத்துல கோர்ஸ் இருக்கு. ஆங்கிலத்துல படிச்சா உலகத்துல எங்க வேணும்னாலும் ஈஸியா வேலை கிடைக்கும்.
1113
பிரான்ஸ்
பிரான்ஸ் france:
கலாச்சாரம், கலை, ஃபேஷன் துறைகளுக்கு சர்வதேச புகழ் பெற்றது. இங்க இருக்கற பல்கலைக்கழகங்கள்ல கல்வி கட்டணம் ரொம்ப குறைவு.
1213
அயர்லாந்து
அயர்லாந்து ireland:
முழுசா ஆங்கிலம் பேசும் நாடுகள்ல இதுவும் ஒண்ணு. தொழில்நுட்பம், மருத்துவம் துறைகள்ல நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கு.
1313
நியூசிலாந்து
நியூசிலாந்து new zealand:
நிறைய இந்தியர்கள் இருக்கற நாடுகள்ல இதுவும் ஒண்ணு. இயற்கை அழகுக்கு புகழ் பெற்றது... அதனால வாழ்க்கை முறை ரொம்ப நல்லா இருக்கும். திறமையான நிபுணர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கு.
இந்த 10 நாடுகளும் வெளிநாடு போய் படிக்கணும், வேலை செய்யணும்னு நினைக்கிறவங்களுக்கு சிறந்த சாய்ஸா இருக்கும்!