தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 124 காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. tamilnad mercantile bank recruitment
27
Tamilnad Mercantile Bank
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கி நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி மற்றும் மாத சம்பளம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
37
Tamilnad Mercantile Bank Job
காலிப்பணியிடங்கள் விவரம்:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்கள் - 124.
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
47
Salary
சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து தேர்வானவருக்கு மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக தேர்வு மையம் தமிழ்நாட்டில் சென்னையில் அமைக்கப்படும்.
57
TMB Bank recruitment
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரையில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், 30 வயதை தாண்டியிருக்கக் கூடாது.
67
tamilnad mercantile bank recruitment 2025
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியிடங்களுக்க விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.tmbnet.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
77
TMB Bank careers
விண்ணப்பிக்க கடைசி நாள் :
மார்ச் 16ம்
தேர்வு நடைபெறும் தேதி :
வரும் ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும். மே மாதம் தேர்வு முடிவு வெளியாகும். நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் மே மாதமே நடைபெறும். ஜூன்/ ஜூலை மாதத்திற்குள் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.