TNSET 2025 தேர்வு முடிவுகள் தாமதமாவதால் தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வு (TNSET) 2025 முடிவுகளுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 6 முதல் 9 ஆம் தேதி வரை இந்தத் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு, உயர்கல்வியில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
26
மன உளைச்சலில் தேர்வர்கள்: தாமதத்தின் விளைவு
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, டிஎன்செட் 2025 தேர்வு முடிவுகள்,ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் மாதம் பிறந்துவிட்ட நிலையிலும் முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களைப் பெற இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என்பதால், இந்தத் தாமதம் தேர்வர்களின் எதிர்கால திட்டங்களை பாதிக்கிறது.
36
"செட் தேர்வே வேண்டாம்": சமூக ஊடகங்களில் கருத்துகள்
தாமதத்தால் அதிருப்தியடைந்த பலர், "நாங்கள் நீண்ட நாட்களாக இந்தத் தேர்வு முடிவுக்காக காத்திருந்து சோர்வடைந்துவிட்டோம். செட் தேர்வு முடிவுகளை நம்பியிருப்பதை விட, யுஜிசி நடத்தக்கூடிய நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்" என்று தங்களது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தேர்வர்களின் பொறுமையின்மையையும் விரக்தியையும் காட்டுகிறது.
தேர்வு முடிவுகள் தாமதமாவதால் விரக்தியடைந்த தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
56
டி.ஆர்.பி. மற்றும் செட்: தொடரும் தாமதம்
மேலும் சிலரோ, "நாங்கள் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 2019-ல் இருந்தே விண்ணப்பித்துக் காத்திருக்கிறோம். அதற்கான முறையான பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதே போல செட் தேர்வு முடிவுகளும் வெளியாவதில் ரொம்ப தாமதம் ஏற்பட்டுள்ளது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர். இது, தேர்வர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான காத்திருப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.
66
TNSET : ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியீடா? உண்மை என்ன?
இந்தநிலையில், ஜூன் 26-ல்செட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? என்பது குறித்து டி.ஆர்.பி. உதவி எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை. இதனையடுத்து சில பெயர் வெளியிடவிரும்பாத அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, "ஜூன் 26-ல் செட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படலாம். தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது" என்றார். எனவே, தேர்வர்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருப்பது நல்லது.