கைநிறைய சம்பளம்.. கெத்தான அரசு வேலை! டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. முழு விவரம் இதோ!

Published : Jan 07, 2026, 09:41 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ் 76 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. கணக்கு, வேளாண்மை, சட்டம், பொறியியல் போன்ற துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளது.

PREV
14
டி.என்.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வில் (CTS) அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

24
காலிப் பணியிடங்கள் மற்றும் தகுதிகள்

இந்த அறிவிப்பில் கணக்கு, வேளாண்மை, சட்டம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கீழ்க்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன:

கணக்கு மற்றும் நிதித்துறை: கணக்கு அலுவலர் (8 இடங்கள்), உதவி மேலாளர் (9 இடங்கள்), முதுநிலை கணக்கு அலுவலர் (1 இடம்), மேலாளர் - நிதி (1 இடம்) மற்றும் முதுநிலை அலுவலர் - நிதி (21 இடங்கள்). இதற்கு CA அல்லது ICWA முடித்திருக்க வேண்டும்.

வேளாண்மைத் துறை: வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கு 26 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் M.Sc (Agricultural Extension/Economics) முடித்திருக்க வேண்டும்.

சட்டத் துறை: உதவி மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்) பதவிகளுக்கு B.L. அல்லது L.L.B முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு 5 வருட அனுபவம் அவசியம்.

பொறியியல் மற்றும் மேலாண்மை: இயந்திரவியல் (Mechanical), மின்னியல் (Electrical) மற்றும் சந்தையியல் (Marketing) ஆகிய துறைகளில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பி.இ/பி.டெக் அல்லது எம்பிஏ முடித்திருப்பதுடன், 5 முதல் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

34
வயது வரம்பு, சம்பளம்

வயது வரம்பு: 01.07.2025 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பணி அனுபவம் கோரப்படும் சில பதவிகளுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும். எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி மற்றும் பி.சி.எம் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை.

சம்பளம்: இந்தப் பதவிகளுக்கு நிலை 22 முதல் நிலை 26 வரையிலான ஊதிய விகிதத்தில் (Pay Matrix) சிறந்த சம்பளம் வழங்கப்படும்.

44
விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நிரந்தரப் பதிவு (One Time Registration) கட்டணம் ரூ. 150. ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அவசியமில்லை. எழுத்துத் தேர்வு கட்டணம் ரூ. 100 (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு விதிமுறைப்படி விலக்கு உண்டு).

விருப்பமுள்ளவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 20.01.2026 கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களைத் தயார் நிலையில் வைத்துக்கொண்டு பிழையின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பித்த பின் அந்தப் படிவத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories