பிஎச்.டி பட்டம் பெற ஆசையா? பெரியார் பல்கலைக்கழகம் அழைக்கிறது! உடனே அப்ளை பண்ணுங்க!

Published : Jan 07, 2026, 09:25 PM IST

PhD பெரியார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 2025 பருவத்திற்கான பிஎச்.டி விண்ணப்பங்கள் வரவேற்பு. நுழைவுத் தேர்வு விலக்கு மற்றும் கடைசி தேதி விவரங்களை இங்கே காணுங்கள்.

PREV
14
PhD டிசம்பர் 2025 பருவத்திற்கான பிஎச்.டி அறிவிப்பு

சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்ககம் (Directorate of Research), டிசம்பர் 2025 பருவத்திற்கான முனைவர் பட்டப் படிப்பிற்கான (Ph.D. Programme) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 19, 2025 முதல் இணையதளத்தில் கிடைக்கின்றன. தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

24
முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்ப முறை

இந்த ஆராய்ச்சி படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 23.01.2026 கடைசி நாளாகும். ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப்படியை (Printed application) பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க 28.01.2026 கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "இயக்குநர், ஆராய்ச்சி இயக்ககம், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011" என்ற முகவரிக்குத் தபாலிலோ அல்லது நேரில் சென்றோ சமர்ப்பிக்கலாம்.

34
NET/SET தேர்ச்சி பெற்றவர்களுக்கான முக்கிய நிபந்தனை

JRF, NET, SET, SLET அல்லது பிற தேசிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அதற்கென வழங்கப்பட்டுள்ள வடிவத்தை (enclosed format) கட்டாயமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அந்த விண்ணப்பதாரரின் விண்ணப்பம் பொது நுழைவுத் தேர்விற்கு (CET) பரிசீலிக்கப்படாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

44
நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு யாருக்கு?

ஏற்கனவே ஜூலை 2025 பருவத்தில் பல்கலைக்கழகம் நடத்திய பொது நுழைவுத் தேர்வில் (CET) தேர்ச்சி பெற்றவர்கள், இந்த டிசம்பர் 2025 பருவத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம். இருப்பினும், அவர்கள் இந்த முறை நுழைவுத் தேர்வு (CET) எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அதாவது, அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும், ஆனால் தேர்வு எழுதத் தேவையில்லை

Read more Photos on
click me!

Recommended Stories