TNPSC: மின் வாரியத்தில் 1,794 காலிப் பணியிடங்கள்! கைநிறைய சம்பளம்! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

Published : Sep 03, 2025, 06:02 PM IST

மின் வாரியத்தில் 1,794 காலிப் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த‌ முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர்.

 தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணியிடங்களின் நியமனம் வெளிப்படையாக நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

24
மின் வாரியத்தில் 1,794 காலிப் பணியிடங்கள்

இந்நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 1,794 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள கள உதவியாளர் பதவிக்கான 1794 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)-II-க்கான அறிவிக்கை. இன்று (03.09.2025) வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்வர்கள் 03.09.2025 முதல் 02.10.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். கணினி வழித்தேர்வு முறையில் 16.11.2025 முற்பகல் மற்றும் பிற்பகலில் தேர்வு நடைபெறும்' என்று கூறப்பட்டுள்ளது.

34
யார் விண்ணப்பிக்கலாம்?

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி மொத்தம் 1,794 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழுமத்தினால் வழங்கப்படும் ஒரு தொழில் பிரிவில் தேசிய தொழில் சான்றிதழ்/ தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மின் பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்புத் திட்டத்தின்கீழ் மின்னியல் தொழில் பிரிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

44
சம்பளம் எவ்வளவு?

தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு மற்றும் தொழில் பயிற்சி என தேர்வுகள் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 16.11.2025 அன்று முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ கணினி மூலம் இந்தத் தேர்வு நடைபெறும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் 02.10.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். வேலையில் சேருபவர்களுக்கு ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories