கிராம உதவியாளர் காலி பணியிடம்.! விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

Published : Sep 02, 2025, 02:05 PM IST

சென்னை மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளவர்கள் https://chennai.nic.in/ இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, 01.10.2025 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

PREV
16
கிராம உதவியாளர் பணி

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில்,

சென்னை மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள மொத்தம் 20 கிராம உதவியாளர் பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பணி நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டம் வாரியாக நியமனம் செய்யப்படவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை (ம) இன சுழற்சி விவரம் அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படும்.

26
கிராம உதவியாளர் பணி- விண்ணப்பிக்க அழைப்பு

மேற்படி பணிக்கான விண்ணப்பத்தினை https://chennai.nic.in/இணையதள முகவரியிலிருந்து 01.09.2025 முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், 01.10.2025 மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும், கிராம உதவியாளர் பணியிடத்திற்கான காலிப்பணியிட விவரம். கல்வித்தகுதி. இதரத்தகுதிகள் மற்றும் இனச்சுழற்சி குறித்த விவரங்களை https://chennai.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

36
கல்வித்தகுதி

தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலைப்பள்ளி இறுதி வகுப்பு माळ (SSLC Secondary School Leaving Certificate Examinations) பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும். Secondary (குறிப்பு SSLC School Leaving Certificate Examination) மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிறதகுதிகள்

1. விண்ணப்பதாரர். விண்ணப்பிக்கும் வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

2. தமிழில் பிழையின்றி வாசித்தல் மற்றும் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

4. உடற் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

5. மிதிவண்டி / இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

6. விண்ணப்பதாரர் மீது எவ்வித வழக்கு நிலுவையில் இருக்க கூடாது. பணி நியமனத்திற்கு விண்ணப்பதாரருடைய ஒழுக்கமும் முன்வரலாறும் தகுதிப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

46
விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் மேற்படி பணிக்கான விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவண இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து விண்ணப்பிக்கலாம்.

மேற்படி பணிக்கான விண்ணப்ப படிவங்களை https://chennai.nic.in/notice_category/recruitment/என்ற இணையதள முகவரியை அணுகி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஊதியவிவரம்

சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.11.100 முதல் ரூ. 35.100 வரை)

56
நிபந்தனைகள்
  • விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு பின்னர் எவ்வகையிலும் வரப்பெறும் விண்ணப்பங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • அரசாணை (நிலை) எண்:16 மனிதவள மேலாண்மை (எ.ஸ்) துறை. குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் தமிழ் வழியில் நாள்:15.04.2025-இல் படித்தவர்களாக இருந்தால் தமிழ் வழி கல்வி சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அளித்த ஆவணங்கள் / விவரங்கள் பின்னாளில் ஏதேனும் போலியானவை என தெரியவரும்பட்சத்தில், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • தகுதியான விண்ணப்பதார்களுக்கு மட்டும் மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும்திறன், வாசித்தல் / எழுதுதல், திறனறித் தேர்வு. மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றிற்கு தனித்தனியே கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
  • திறனறித் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு வருகை தர போக்குவரத்து செலவினம் ஏதும் வழங்கப்பட மாட்டாது.
  • விண்ணப்பங்களை தபால் / அஞ்சல் மூலம் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பும் போது ஏற்படும் கால தாமதங்களுக்கு துறை பொறுப்பாகாது.
66
விண்ணப்பத்தில் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சம்மந்தப்பட்ட வட்டாட்சியருக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
  • இதர முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  • 25-10 அளவுள்ள அஞ்சல் உறையில் ரூ.25/-க்கான அஞ்சல் வில்லையை ஒட்டி தற்போதைய சுயவிலாசத்தை குறிப்பிட்டு, அதனை விண்ணப்பத்துடன் சேர்த்து வழங்க வேண்டும்.
  •  மூன்றாம் பாலினத்தவர் எனில், தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நலவாரியத்தால் வழங்கப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும்.
  •  விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் அனைத்து சுயசான்றொப்பம் (Self Attested) செய்திருக்க வேண்டும். சான்றுகளிலும்

எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மேற்கண்ட தகுதியுடையவர்கள் சென்னை மாவட்ட வருவாய் அலகில், வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

Read more Photos on
click me!

Recommended Stories