இந்து சமய அறநிலையத்துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு; 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமாம்

First Published | Aug 7, 2024, 7:30 PM IST

இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் 10ம் வகுப்பு மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில்

திருச்சி மாநகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு

பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக வருகின் செப்டம்பர் 7ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

வேலை வாய்ப்பு

விண்ணப்பப் படிவங்கள் கோவிலின் அதிகாபரப்பூர்வ இணையதளமான https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/ மற்றும் இந்துசமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in/hrcehome/index.php ஆகிய இணையதள பக்கங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அகிலா

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் அஞ்சல் கவரில் பதவிக்கான பெயரை குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில், திருவானைக்காவல் - 620 005, தொலைபேசி எண் 04312230257 என்ற முகவரிக்கு அலுவலக நேரத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!