பொதுத்துறை வங்கிகளில் கொட்டி கிடக்கும் 4,400 காலி பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

First Published | Aug 1, 2024, 5:52 PM IST

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை IBPS வெளியிட்டுள்ளது.

வங்கி பணி

IBPS ஆணையம் வேலை வாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில், probationary Officers / Management Trainees பணிகளுக்கான காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக 4455 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

வங்கி தேர்வு

அதன்படி Probationary Officers / Management Trainees பணிக்காக காலியாக உள்ள 4455 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tap to resize

கல்வி தகுதி

இப்பணிக்கு சேர விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் பட்டப்படிப்பு (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.  மேலும் தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

SC / ST / PWBD - ரூ.175, மற்றவர்கள் ரூ.850 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் பிரிலிமினரி, மெயின்ஸ் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப தேதி

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக வருகின்ற 21ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!