நாடு முழுவதும் 44,228 பணியிடங்களும், தமிழகம் முழுவதும் 3,789 பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில், இவற்றுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
29
பணி விவரம்
கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், தபால் ஊழியர்ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
39
விண்ணப்ப தேதி
ஜூலை 15ம் தேதி தொடங்கி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை நேரில் வழங்க அனுமதி கிடையாது.
49
அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும், குறிப்பாக உள்ளூர் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
59
ஊதியம்
கிளை போஸ்ட் மாஸ்டர் - 12,000 - 29,380,
உதவி கிளை போஸ் மாஸ்டர், தபால் ஊழியர் - 10,000 - 24,470 ஊதியமாக வழங்கப்படுகிறது.
69
வயது வரம்பு
18 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
79
கல்வி தகுதி
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அதற்கு மேல் படித்திருந்தாலும் 10ம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
89
பதிவு செய்ய தேவையானவை
செல்போன் எண், இ - மெயில் முகவரி, தேர்ச்சி விவரங்கள், புகைப்படம் (50 Kb), கையெழுத்து படம் (20 Kb) இருக்க வேண்டும்
99
தேர்வு செய்யும் முறை
10ம் வகுப்பல் பெறப்பட்ட மதிப்பெண் முறையில் தேர்வுப் பட்டியல், நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.