JOB: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ஆரம்ப சம்பளமே ரூ.35 ஆயிரம்.! ரயில்வேயில் 7,951 காலிபணியிடம்-விண்ணப்பிக்க அழைப்பு

First Published | Jul 24, 2024, 9:14 AM IST

ரயில்வே துறையில்  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காலியாக உள்ள 7,951 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், மாதம் சம்பளம் எவ்வளவு.? விண்ணப்பிக்க கல்வி தகுதி என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

job offers

படித்த படிப்பிற்கு வேலை வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ள நிலையில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குவித்து கிடக்கிறது. அதனை பெரும்பாலான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருந்த போதும் அரசு வேலை, அரசு சம்பளம் தான் வேண்டும் என இளைஞர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி வருவார்கள்.

அந்த வகையில் தமிழக அரசு பணியிடங்களை நிரப்பி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடைபெற்று தகுதியானவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதே நேரத்தில் மத்திய அரசு பணியாளர்களுக்கு எஸ்எஸ்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

ரயில்வேயில் வேலைவாய்ப்பு

இந்தநிலையில் இளைஞர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் ஒரு அறிவிப்பை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. அதன் படி காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி: 

கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் பணியிடத்திற்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் கொண்ட பட்டப்படிப்பை 45 மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்னப்பிக்கலாம். மேலும் ஜூனியர் இன்ஜினியர் (ஐடி: பிஜிடிசிஏ/பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) , பிசிஏ/ பிடெக் முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். டெபோ மெட்டிரியல் கண்காணிப்பாளர் பணிக்கு டிப்ளமோ/ இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tap to resize

வயது வரம்பு:

காலிபணியிடங்களுக்கு 18 - வயது முதல் 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு வயது தளர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்,  பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

காலியான பணியிடங்கள்

 ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு, கெமிக்கல் அல்லது  மெட்டலர்ஜிக்கல் உதவியாளர் - 7934 பணியிடங்கள் நிரப்படுகின்றன.

கெமிக்கல் சூப்பர்வைசர்/ ஆராய்ச்சி மற்றும் உலோகவியல் மேற்பார்வையாளர் / ஆராய்ச்சி - 13 பணியிடங்கள் என ஒட்டுமொத்தமாக 7,951 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 

மாத ஊதியம்

ஊதியமாக ஆரம்பத்தில் 35ஆயிரத்து 400 ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க காலக்கெடு

ரயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 30.07.2024ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என  கூறப்பட்டுள்ளது. 

நாளை கடைசி நாள்.!விண்ணப்பித்துவிட்டீர்களா.? மத்திய அரசில் 17ஆயிரம் பேருக்கு வேலை.. கை நிறைய சம்பளம்-இதோ லிங்க்
 

Latest Videos

click me!