தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு! எப்போது விண்ணப்பிக்கலாம்?

First Published Mar 14, 2024, 11:22 AM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Teachers Recruitment Board

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4,000 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரம் பிறந்தும் அறிவிக்கை வெளியிடப்படவில்லை. 

Tamilnadu Government

இதனால் உதவி பேராசிரியர் பணியிடங்களை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளீர்களா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி..!

Exam Date

இந்நிலையில் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதன் மூலம் 569 தமிழ் உதவி பேராசிரியர்கள், 656 ஆங்கில உதவி பேராசிரியர்கள், 318 கணிதம் மற்றும் 296 வணிகவியல் உதவி பேராசிரியர்கள் உட்பட 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

click me!