Published : May 07, 2025, 08:32 PM ISTUpdated : May 07, 2025, 08:34 PM IST
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் 2025 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு (TNGASA 2025) ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 176 கல்லூரிகளுக்கான ஒருங்கிணைந்த இணையத்தளம். தகுதி மற்றும் தேதிகளை சரிபார்க்கவும்!
Tamil Nadu Government Arts and Science Colleges Admissions 2025
தமிழகத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கையைத் தொடங்கியுள்ளன. மொத்தம் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உங்களுக்குப் பிடித்த கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க இது ஒரு பொன்னான வாய்ப்பு.
27
Tamil Nadu Government Arts and Science Colleges Admissions 2025
இதற்காக தமிழ்நாடு அரசு ஒரு ஒருங்கிணைந்த ஆன்லைன் விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு விருப்பமான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். பதிவு செய்தல், விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல், கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது, விண்ணப்பத்தை அச்சிடுவது என அனைத்து செயல்முறைகளும் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
37
யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசின் விதிமுறைகளின்படி தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியைப் பெற இது ஒரு சிறந்த வழி. SC/SCA/ST பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்ப மற்றும் பதிவுக் கட்டணம் வெறும் ரூ. 2/- மட்டுமே. மற்ற அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இது ரூ. 50/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முன், மாணவர்கள் சேர்க்கைக்கான தகுதி, ஒவ்வொரு கல்லூரி மற்றும் பாடப்பிரிவு குறித்த விவரங்கள், தேவையான ஆவணங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். சரியான தகவல்களை அளித்து விண்ணப்பத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பிப்பது கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நேரத்தில் எந்தவிதமான குழப்பத்தையும் தவிர்க்க உதவும். புதியதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் "Click here for new UG Registration" என்ற இணைப்பை கிளிக் செய்து, தங்களது விவரங்களை பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம்.
57
முக்கிய தேதிகள்:
இந்த ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே மாதம் 7 ஆம் தேதி (07-05-2025) தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே மாதம் 27 ஆம் தேதி (27-05-2025) ஆகும். எனவே, தகுதியுள்ள மாணவர்கள் கால தாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
67
தயங்காதீங்க... உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தரமான கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் பல்வேறு வாய்ப்புகளையும் வழங்குகின்றன. குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வியைப் பெற இது ஒரு அருமையான வாய்ப்பு. எனவே, உயர்கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பியுங்கள்! உங்கள் எதிர்காலக் கனவுகளை நனவாக்க இது ஒரு சிறந்த தொடக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
77
இணையதளம்
இணையதளம் https://www.tngasa.in/
பதிவு செய்யும் முறை https://static.tneaonline.org/docs/arts/tamil_instruction.pdf?t=1746628378983
List of Government Colleges in Tamil Nadu : https://static.tneaonline.org/docs/arts/college_list.pdf?t=1746628378983
District wise college list: https://static.tneaonline.org/docs/arts/District-wise-college-list.pdf?t=1746628378983