CBSE போர்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
CBSE போர்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். CBSE மாணவர்கள் தங்கள் ரிசல்ட்க்காக ஆவலோடு காத்துக்கிட்டு இருக்காங்க. ரிசல்ட் வந்ததும் மாணவர்கள் cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ வெப்சைட்கள்ல செக் பண்ணிக்கலாம். ஆனா நிறைய பேர் ஒரே நேரத்துல வெப்சைட்டை பார்க்க ட்ரை பண்றதால சர்வர் டவுன் ஆகிடும் இல்ல கிராஷ் ஆகிடும். அந்த மாதிரி சமயத்துல ரிசல்ட் பார்க்க முடியாம மாணவர்கள் ரொம்ப கவலைப்படுவாங்க.
26
ஆனா ரிசல்ட் பார்க்குறதுக்கு வெப்சைட் மட்டும்தான் வழின்னு நெனச்சுடாதீங்க. வெப்சைட்டை தவிர SMS மூலமாவும், டிஜிலாக்கர்லயும் CBSE ரிசல்ட்டை பார்க்க முடியும். நீங்களும் CBSE போர்டு ஸ்டூடண்ட்டா இருந்தா, டிஜிலாக்கர்ல எப்படி CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ரிசல்ட்டை பார்க்குறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!
36
டிஜிலாக்கரில் CBSE ரிசல்ட் 2025 ஐ பார்ப்பது எப்படி?
ரிசல்ட் வெளியானதுக்கு அப்புறம் மாணவர்கள் முதல்ல digilocker.gov.in வெப்சைட்டுக்கு போகணும்.
உங்களுக்கு ஏற்கனவே அக்கவுண்ட் இருந்தா லாகின் பண்ணுங்க.
நீங்க புது யூசரா இருந்தா சைன் அப் பண்ணுங்க.
லாகின் பண்ணதுக்கு அப்புறம் “Education” இல்லன்னா “Results” செக்ஷனுக்கு போங்க.
அங்க ஸ்டூடண்ட்ஸுக்கு CBSE Result ஆப்ஷன் கிடைக்கும்; அதை கிளிக் பண்ணுங்க. இப்போ உங்க ரோல் நம்பர், டேட் ஆஃப் பர்த் மற்றும் தேவையான மத்த டீடைல்ஸ் எல்லாம் என்டர் பண்ணனும்.
நீங்க சப்மிட் பண்ணதும் உங்க மார்க்ஷீட் ஸ்க்ரீன்ல வந்துடும். அதை நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.
மூத்த அதிகாரி ஒருத்தர்கிட்ட இருந்து கிடைச்ச தகவலின்படி, போர்டு ரிசல்ட்க்கான எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டாங்க. ஆனா ரிசல்ட் வெளியாகும் தேதி மற்றும் நேரம் இன்னும் முடிவு பண்ணல. ரிசல்ட் தேதி பத்தின அறிவிப்பை போர்டு சீக்கிரமே சோஷியல் மீடியா அக்கவுண்ட்ஸ் மூலமா வெளியிடுவாங்க. மே மாசத்தோட மூணாவது இல்லன்னா நாலாவது வாரத்துல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாக வாய்ப்பு இருக்கு. மாணவர்கள் CBSE-யோட அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் சோஷியல் மீடியா அக்கவுண்ட்ஸை மட்டும் நம்பும்படி அறிவுறுத்தப்படுறாங்க.