TRB Assistant Professor Recruitment: 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு எப்போது? அரசு தகவல்

Published : Apr 26, 2025, 10:23 PM IST

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பு. எப்போது? அரசு தகவல்

PREV
16
TRB Assistant Professor Recruitment: 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு எப்போது? அரசு தகவல்
TN TRB Assistant Professor Recruitment

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாக காண்போம்.  

26
Teachers Recruitment Board

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வருடம் மார்ச் 13-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான தேர்வு கடந்த வருடம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

36

உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வான செட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான தேர்வும் நடைபெறவில்லை. இந்நிலையில், செட் தேர்வு கடந்த மார்ச் 6 முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வு எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

TNSET Result 2025: டிஎன்செட் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? டி.ஆர்.பி-யிடம் கேள்வி

46

இந்தநிலையில் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட பள்ளி கல்வி துறையின் மானிய கோரிக்கையில் ஒரு தகவல் இடம் பெற்றுள்ளது. 

56
TN TRB Assistant Professor Recruitment

பள்ளி கல்வி துறையின் மானிய கோரிக்கை 2025 பக்கம் எண் 123-ல் அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி "தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வானது மாநில தகுதி தேர்வான செட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு இதற்கான போட்டி தேர்வு நடைபெறும்." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையின் மானிய கோரிக்கை  லிங்க்:  https://cms.tn.gov.in/cms_migrated/document/docfiles/schedu_t_pn_2025_26.pdf

66
SET Exam

எனவே மாநில தகுதி தேர்வான செட் தேர்வு முடிவுகள் வரும் மே முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் மே கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனை தொடர்ந்து ஜுலை மாதத்தில் இந்த தேர்வு நடைபெறும் என்று ஏதிர்பார்க்கப்படுகிறது. 

UGC NET Exam June 2025: யுஜிசி நெட் தேர்வு ஜூன் 2025 குறித்த அறிவிப்பு வெளியானது !!!

Read more Photos on
click me!

Recommended Stories