தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்!

Published : Apr 26, 2025, 05:19 PM IST

தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பிற வேலை வாய்ப்புகள்! கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை அறிய இங்கே பார்க்கவும்!  

PREV
17
தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தில் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்!

தேசிய அறிவியல் அருங்காட்சியகம் (National Council of Science Museums - NCSM), மத்திய அரசின் கீழ் செயல்படும் ஒரு மதிப்புமிக்க நிறுவனம். தற்போது, திறமையான நபர்களைத் தேர்வு செய்து பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆயத்தமாக உள்ளது. உங்களுக்கு ஒரு அரசு வேலை கனவாக இருந்தால், இதோ உங்களுக்கான பொன்னான வாய்ப்பு!
 

27

அலுவலக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீஷியன், ஆர்ட்டிஸ்ட் என மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, வழங்கப்படும் சம்பளம், வயது வரம்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

37

நிறுவனம்: National Council of Science Museums (NCSM)
வேலை வகை: மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 30
பணியிடம்: இந்தியா
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2025
 

47

காலியிடங்கள் மற்றும் தகுதிகள்:
1.  பதவியின் பெயர்: Technician-‘A’
    சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
    காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் ITI சான்றிதழ் அல்லது அதற்கு இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருடப் படிப்புக்கான சான்றிதழ் பெற்றவர்கள் ஒரு வருட பணி அனுபவமும், ஒரு வருடப் படிப்புக்கான சான்றிதழ் பெற்றவர்கள் இரண்டு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

2.  பதவியின் பெயர்: Technical Assistant-‘A’
    சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
    காலியிடங்கள்: 09
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் (Electrical/ Computer Science / Information Technology / Computer Application / Electronics/ Civil/ Mechanical) டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 

57

3.  பதவியின் பெயர்: Artist-‘A’
    சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
    காலியிடங்கள்: 02
 கல்வி தகுதி: SLC முடித்த பிறகு ஃபைன் ஆர்ட்ஸ்/ கமர்ஷியல் ஆர்ட்ஸில் குறைந்தது இரண்டு வருட கால டிப்ளமோ/ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருடப் படிப்புக்கான டிப்ளமோ/ சான்றிதழ் பெற்றவர்கள் ஒரு வருட பணி அனுபவமும், ஒரு வருடப் படிப்புக்கான டிப்ளமோ/ சான்றிதழ் பெற்றவர்கள் இரண்டு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

4.  பதவியின் பெயர்: Office Assistant Gr.III
    சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
    காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இந்தியிலும் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

67
Job Vacancy

விண்ணப்ப கட்டணம்:
ST, SC, PwBD, ESM – கட்டணம் இல்லை
Others – Rs.885/-

தேர்வு முறை:
Aptitude Test / Written Test
Skill Test (தட்டச்சு, தொழில்நுட்பம் அல்லது வர்த்தக திறன்களுக்கான சோதனை)
ஆவண சரிபார்ப்பு

77

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.04.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2025

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் https://ncsm.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு! ₹75,000 சம்பளத்தில் ஆலோசகர் பணி!

Read more Photos on
click me!

Recommended Stories