தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) 34 விளையாட்டுப் பயிற்சியாளர் மற்றும் பாரா விளையாட்டுப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1,30,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT), தமிழகத்தில் விளையாட்டுத் தரத்தை உயர்த்துவதற்காகத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து பயிற்சியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆட்சேர்ப்பு குறித்த முழுமையான தகவல்கள் இதோ.!
26
பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 34 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
விளையாட்டுப் பயிற்சியாளர் (Regular Coach) - 30 இடங்கள்.
பாரா விளையாட்டுப் பயிற்சியாளர் (Para Coach) - 04 இடங்கள்.
இதில் தடகளம், கால்பந்து, ஹாக்கி, கபடி மற்றும் நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளுக்குப் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
36
கல்வி மற்றும் தொழில்முறைத் தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பின்வரும் தொழில்முறைத் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை அவசியம் பெற்றிருக்க வேண்டும்.
தேசிய விளையாட்டு நிறுவனம் (NIS/SAI) வழங்கிய ஓராண்டு கால விளையாட்டுப் பயிற்சி டிப்ளமோ.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதுகலை டிப்ளமோ (PG Diploma in Sports Coaching).
தேசிய அளவிலான அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.
(01.07.2026 தேதியின்படி) பொதுப் பிரிவினர் - 21 முதல் 45 வயது வரை.
BC, BCM, MBC/DNC, SC, ST ஆதரவற்ற விதவைகள் - 21 முதல் 50 வயது வரை.
பாரா பயிற்சியாளர் பணிக்கு - 21 முதல் 55 வயது வரை.
ஊதிய விகிதம்
தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்குத் தமிழக அரசின் ஊதிய நிலை 12-ன் படி (Pay Level 12), மாதம் ரூ. 35,600 முதல் ரூ. 1,30,800 வரை ஊதியம் வழங்கப்படும். இது ஒரு அரசுப் பணி என்பதால் இதர சலுகைகளும் உண்டு.
56
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படாமல், ஒரு விரிவான மதிப்பீட்டு முறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவர்: கல்வித் தகுதி, பெற்ற பதக்கங்கள் மற்றும் பயிற்சியாளர் அனுபவத்திற்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழ் மொழித் தகுதித் தேர்வில் கட்டாயம் 40% மதிப்பெண் பெற வேண்டும். மற்றும் விளையாட்டுப் பொது அறிவுத் தேர்வும் நடைபெறும். விளையாட்டுத் திறன் மதிப்பீடு மற்றும் நேருக்கு நேர் நேர்காணல் தேர்விலும் வெற்றி பெற்றால் நீங்களும் கோச் ஆகலாம்.!
66
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கியத் தேதிகள்
ஆர்வமுள்ளவர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.01.2026.
விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டு, தமிழக வீரர்களை உலகத் தரத்திற்கு உயர்த்த விரும்பும் தகுதியான நபர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.