10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பள்ளி மாணவர்களுக்கு ஷாக் செய்தி! அட்டவணை வெளியீட்டில் திடீர் மாற்றம்!

Published : Oct 28, 2025, 08:30 PM IST

Public Exam Date தமிழ்நாடு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 கால அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு. சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தேதிகள் முடிவு. CBSE தேதிகளும் அறிவிப்பு.

PREV
14
நவம்பர் முதல் வாரத்தில் பொதுத் தேர்வுக் கால அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 2026ஆம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக் கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது என்று பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வழக்கமாகவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தேர்வுக்குத் தயாராகும் வகையில், பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புக்கான அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வருட (2025-2026) பொதுத் தேர்வு அட்டவணை அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

24
தாமதம் ஏன்? தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல்!

தேர்வுக் கால அட்டவணை வெளியிடுவதற்கான தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அட்டவணை வெளியாவது தள்ளிப்போகியுள்ளது. இது குறித்து பேசிய தேர்வுத் துறை அதிகாரிகள், பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு விட்டது என்றும், பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்தனர். அரசின் அனுமதி கிடைத்தவுடன், தேர்வுக் கால அட்டவணையை நவம்பர் 4ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

34
தேர்தலை கருத்தில் கொண்ட தேதிகள்: அதிகாரிகள் விளக்கம்

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டே, பொதுத் தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், எந்தவிதப் பாதிப்பும் இன்றி மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி முடிக்க முடியும். எனவே, மாணவர்கள் நவம்பர் 4ஆம் தேதி அட்டவணை வெளியான பிறகு, அதற்கேற்ப தங்கள் தேர்வுத் தயாரிப்புப் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

44
CBSE தேர்வுகளின் உத்தேச தேதிகள் அறிவிப்பு

இதற்கிடையே, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ (CBSE), 10 மற்றும் 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான உத்தேச தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வு பிப்ரவரி 17 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 45 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் பங்கேற்க உள்ளனர். மேலும், தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் வினாத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கும் என்றும், அடுத்த 12 நாட்களுக்குள் வினாத்தாள் மதிப்பீடு முடிவடையும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories