TRB-யின் அடுத்த திடீர் அறிவிப்பு! 2708 உதவிப் பேராசிரியர் பணி.. கால அவகாசம் நீட்டிப்பு! இந்த ஒரு சான்றிதழுக்கு மட்டும் சலுகை!

Published : Oct 28, 2025, 08:17 PM IST

TN Assistant Professor தமிழ்நாடு உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி! பணி அனுபவச் சான்றிதழ்களை (Annexure IV, V, VI) பதிவேற்றம் செய்ய நவம்பர் 30, 2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

PREV
14
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய அறிவிப்பு: கால அவகாசம் நீட்டிப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2708 உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை (எண். 04/2025) ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB) கடந்த 16.10.2025 அன்று வெளியிட்டது. இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு 17.10.2025 முதல் 10.11.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது விண்ணப்பதாரர்கள் நலன் கருதி ஒரு முக்கிய பிற்சேர்க்கை (Addendum) அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

24
விண்ணப்ப கால அவகாசம் குறித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி!

பணிநாடுநர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்தும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் இந்தப் புதிய பிற்சேர்க்கை அறிவிப்பை சென்னையில் இருந்து 28.10.2025 அன்று வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 10.11.2025 தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், மற்றொரு முக்கிய அம்சத்தில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

34
பணி அனுபவச் சான்றிதழ் பதிவேற்றம்: நவம்பர் 30 வரை சலுகை!

விண்ணப்பதாரர்கள், தாங்கள் பெற்ற பணி அனுபவச் சான்றிதழ்களை (Work Experience Certificates) மட்டும் இணையதளத்தில் உள்ளீடு செய்ய கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட பிற்சேர்க்கை 04-A-இல் குறிப்பிடப்பட்டுள்ள படிவங்கள் (Annexure - IV, V, VI) மூலம், பணி அனுபவச் சான்றிதழ்களை இணையதளத்தில் 30.11.2025 வரை உள்ளீடு செய்வதற்கு (பதிவேற்றம் செய்வதற்கு) கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. 

44
விண்ணப்பதாரர்கள்

எனவே, விண்ணப்பதாரர்கள் 10.11.2025-க்குள் விண்ணப்பத்தை சமர்ப்பித்துவிட்டு, நவம்பர் 30, 2025-க்குள் பணி அனுபவச் சான்றிதழ்களை உள்ளீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories