தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த அயலகத் தமிழர் தினம் 2025 அறிவிப்பைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலைகளை கற்றுத் தரும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் கலை பண்பாட்டுத் துறை மூலம் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மியான்மர், இந்தோனேசியா, கம்போடியா, மாலத்தீவு, மொரிஷியஸ், ரீயூனியன், சீஷெல்ஸ், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி, உகாண்டா போன்ற நாடுகளில் செயல்படும் தமிழ்சங்கங்களில் பரதநாட்டிய ஆசிரியர்கள் மற்றும் கிராமிய நடன ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
சம்பளம் மற்றும் வசதிகள்
தேர்வு செய்யப்படும் கலையாசிரியர்கள் ஒரு வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
- மாத சம்பளம்: ரூ.1,25,000
- வெளிநாடு சென்று திரும்புவதற்கான விமானச் செலவு
விசா செலவு
தங்குமிடம் செலவுகள் இவை அனைத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் வழங்கப்படும்.