எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட், வெள்ளியில் முதலீடு செய்ய ஒரு புதிய ETF திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.100 முதல் முதலீடு செய்யக்கூடிய இந்தத் திட்டம், செய்கூலி, அபாயங்கள் இல்லாமல் டிஜிட்டல் முறையில் வெள்ளியில் முதலீடு செய்யும் வாய்ப்பாகும்.
முதலீட்டு உலகில் தங்கத்தைப் போலவே, தற்போது வெள்ளியும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், தொழில்துறை தேவைகள் மற்றும் பாதுகாப்பான முதலீடு என்ற கோணத்தில் வெள்ளியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
25
எளிதாக முதலீடு செய்யலாம்
இந்தச் சூழலில், எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வெள்ளியில் முதலீடு செய்யும் புதிய ETF (Exchange Traded Fund) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம், வெள்ளியில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் முதலீடு செய்யும் வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு கிடைத்துள்ளது.
35
ரூ.100 முதலீட்டிலிருந்தே இதில் சேர முடியும்
இந்த திட்டத்தின் NFO (New Fund Offer) டிசம்பர் 22 வரை நடைபெறுகிறது. குறைந்தபட்சமாக ரூ.100 முதலீட்டிலிருந்தே இதில் சேர முடியும் என்பது சிறு முதலீட்டாளர்களுக்கு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது. பாரம்பரியமாக வெள்ளி நகைகள் அல்லது வெள்ளி கட்டிகள் வாங்கும்போது, செய்கூலி, பாதுகாப்பு செலவுகள், திருடுபோகும் அபாயம் போன்ற பல சிக்கல்கள் இருக்கும். ஆனால், ETF திட்டத்தில் இத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை. டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்யப்படுவதால், பாதுகாப்பு மற்றும் வசதி இரண்டும் உறுதியாகும்.
கடந்த ஒரு வருட காலத்தில் வெள்ளி கணிசமான வருமானத்தை வழங்கியிருப்பதும் முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதுவரை வெள்ளியில் முதலீடு செய்யாதவர்களும், தங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பலப்படுத்த விரும்புபவர்களும் இந்தத் திட்டத்தை ஒரு நல்ல மாற்றாகப் பரிசீலிக்கலாம்.
55
தங்கத்துக்கு மாற்றாக மாறும் வெள்ளி
எடெல்வைஸ் வெள்ளி ETF திட்டம், குறைந்த முதலீடு, எளிதான அணுகல் மற்றும் பாதுகாப்பான முதலீடு ஆகிய அம்சங்களால் கவனம் பெறுகிறது. நீண்டகால முதலீட்டு நோக்குடன், தங்கத்துக்கு மாற்றாக வெள்ளியையும் சேர்க்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.