இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026-ஆம் ஆண்டிற்காக 93 இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது. டேட்டா சயின்ஸ், ஐடி, சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் ஜனவரி 6, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. RBISB/DA/04/2025-26 என்ற அறிவிப்பு எண்ணின் கீழ், மொத்தம் 93 Engineer & Expert பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, நிதி அபாய மேலாண்மை, பொருளாதார பகுப்பாய்வு போன்ற துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் RBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் பெறப்படுகிறது.
27
பதவி மற்றும் பணி செய்யும் இடங்கள்
இந்த ஆட்சேர்ப்பில் Data Scientist, Data Engineer, IT Security Expert, IT System Administrator, IT Project Administrator, AI / ML Specialist, IT – Cyber Security Analyst, Network Administrator, Project Manager உள்ளிட்ட பல்வேறு Grade ‘C’, ‘D’, ‘E’ நிலை பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. இப்பணியிடங்களுக்கான பணியிடம் பெரும்பாலும் மும்பை மற்றும் RBI Data Centres ஆகும். மத்திய அரசு நிறுவனத்தில் உயர் பொறுப்புகளுடன் கூடிய தொழில்நுட்ப பணிகளில் சேர விரும்புவோருக்கு இது ஒரு அரிய சந்தர்ப்பமாகும்.
37
கல்வி தகுதி
கல்வித் தகுதியைப் பொருத்தவரை, BE / B.Tech / M.Tech / MCA / MSc / MBA / CA / ICWA போன்ற பட்டங்கள் அவசியமாக்கப்பட்டுள்ளன. Data Science, IT, Cyber Security, Finance, Economics, Statistics போன்ற துறைகளில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் தேவைப்படும். சில பதவிகளுக்கு CISSP, CISA, CFA, FRM, PMP, AI/ML போன்ற தொழில்முறை சான்றிதழ்கள் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு 2026 ஜனவரி 6 நிலவரப்படி குறைந்தபட்சம் 21 வயது முதல் 40 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில மூத்த நிலை பணிகளுக்கு அதிகபட்ச வயது 45 அல்லது 62 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. SC/ST, OBC, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் வழங்கப்படும்.
57
சம்பள விவரம் இதுதான்
சம்பள விவரங்களில், Grade ‘C’ (Level 3) பதவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் வரை, Grade ‘D’ (Level 4) பதவிகளுக்கு ரூ.4.30 லட்சம் வரை மற்றும் Grade ‘E’ (Level 5) பதவிகளுக்கு ரூ.4.80 லட்சம் வரை CTC வழங்கப்படும். இது அனுபவம் வாய்ந்த நிபுணர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஊதியமாகும்.
67
விண்ணப்பக் கட்டணம்
இந்த பணிகளுக்கான தேர்வு முறை Preliminary Screening, ஆவண சரிபார்ப்பு, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய கட்டங்களின் மூலம் நடைபெறும். விண்ணப்பக் கட்டணமாக SC/ST/Ex-Servicemen/மாற்றுத்திறனாளிகள் ரூ.100/- மற்றும் பிற விண்ணப்பதாரர்கள் ரூ.600/- ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
77
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.01.2026 வரை RBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://opportunities.rbi.org.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் மேலதிக விவரங்களை RBI இணையதளத்தில் கவனமாகப் படித்து, தகுதி உள்ளவர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பிப்பது அவசியம்.