Govt Job Alert: 8th முடித்திருந்தாலே போதும்.! ரூ.62,000 சம்பளத்தில் அரசு வேலை காத்திருக்கு.!

Published : Dec 19, 2025, 06:43 AM IST

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TNSEC) 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. சென்னை அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் என மொத்தம் 09 நிரந்தர அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

PREV
15
அழைக்கிறது மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (Tamil Nadu State Election Commission – TNSEC) சார்பில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சென்னை பணியிடத்தில் மொத்தம் 09 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அலுவலக உதவியாளர் 07 பணியிடங்களும், டிரைவர் 02 பணியிடங்களும் அடங்கும். இந்த பணிகள் அனைத்தும் நிரந்தர அரசு வேலைகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களே விண்ணப்பிக்க முடியும் என்பதால், குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

25
விண்ணப்பம் கிடைக்கும் இடம்

இந்த TNSEC Recruitment 2026 அறிவிப்பின்படி, விண்ணப்பங்கள் 18.12.2025 முதல் 02.01.2026 மாலை 5 மணி வரை பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆஃப்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnsec.tn.gov.in/ தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து, முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

35
கல்வித்தகுதி இதுதான்

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, 8ஆம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்டத் தெரிந்திருத்தல் மற்றும் ஜெராக்ஸ், பிரிண்டர் இயந்திரங்களை பயன்படுத்தத் தெரிந்திருத்தல் அவசியமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிரைவர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். 1988க்கு முன் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் அரசு அங்கீகரித்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும், வாகன இயந்திர அறிவு மற்றும் First Aid அறிவும் கட்டாயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

45
செம்ம சம்பளம் மக்களே

வயது வரம்பைப் பொருத்தவரை, பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 32 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. BC, MBC பிரிவினருக்கு 34 வயது வரை, SC/ST மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில்லை. முன்னாள் படைவீரர்களுக்கும் அரசு விதிமுறைகளின்படி வயது சலுகைகள் வழங்கப்படும்.

இந்த பணிகளுக்கான சம்பள விவரங்களைப் பார்த்தால், அலுவலக உதவியாளர் பணிக்கு Level-1 சம்பள நிலைப்படி ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். டிரைவர் பணிக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறை குறுகிய பட்டியல் தயாரித்தல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். நேர்காணல் தேதி மற்றும் இடம் தொடர்பான தகவல்கள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Speed Post அல்லது Email மூலம் தெரிவிக்கப்படும்.

55
அரசு நிரந்தர வேலை

விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, கல்விச் சான்றிதழ்கள், சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களின் சுய உறுதிப்படுத்தப்பட்ட நகல்களுடன், ₹30 தபால் முத்திரையுடன் கூடிய சுய முகவரி உறை ஒன்றையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்: The Chief Administrative Officer, Tamil Nadu State Election Commission, No.208/2, Jawaharlal Nehru Road, Arumbakkam, Chennai – 600106.

மொத்தத்தில், குறைந்த கல்வித் தகுதியுடன் அரசு நிரந்தர வேலை தேடுபவர்களுக்கு TNSEC Recruitment 2026 ஒரு அரிய வாய்ப்பாகும். தகுதி உள்ளவர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்து இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories