
ஐடி துறையில் ஜொலிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு! இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) தற்போது சைபர் செக்யூரிட்டி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான இண்டர்வியூ வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி சென்னை, பெங்களூர் மற்றும் புனே ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. ஐடி துறையில் ஆர்வம் உள்ள மற்றும் தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இண்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்.
இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவதுதான். அதற்காக பலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கோடை காலம் நெருங்கி வரும் இந்த நேரத்தில், ஐடி நிறுவனங்களில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், டிசிஎஸ் நிறுவனம் சைபர் செக்யூரிட்டி பிரிவில் திறமையானவர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
டிசிஎஸ்-ன் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:
டிசிஎஸ் நிறுவனத்தில் தற்போது சைபர் செக்யூரிட்டி (Cyber Security) பிரிவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 4 வருடங்கள் அல்லது அதற்கு மேலான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, Zscaler குறித்த திறன் (ஸ்கில்செட்) அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான இண்டர்வியூ ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. அன்று ஒரே நாளில் சென்னை, பெங்களூர் மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களிலும் இண்டர்வியூ நடைபெறும். இண்டர்வியூவில் கலந்து கொள்ள விரும்புவோர் குறிப்பிட்ட முகவரிகளுக்குச் செல்ல வேண்டும்:
பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படலாம். அதிர்ஷ்டவசமாக, சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்திலேயே பணி வாய்ப்பு கிடைக்கக்கூடும். தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் சம்பளம் குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், பணி அனுபவம் மற்றும் தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்றும், இது தொடர்பான விவரங்கள் இறுதி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, சைபர் செக்யூரிட்டி துறையில் ஆர்வமும், தேவையான தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கின் மூலம் விண்ணப்பம் செய்து ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் இண்டர்வியூவில் கலந்து கொள்ளலாம்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய: https://www.linkedin.com/jobs/view/4206832875/
இதையும் படிங்க: இந்திய கடற்படையில் வேலை! பிளஸ் 2 முடித்த ஆண்கள் உடனே விண்ணப்பிக்கவும்…