திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு: 163 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…

Published : Apr 12, 2025, 06:20 PM ISTUpdated : May 02, 2025, 11:07 AM IST

தமிழ்நாடு அரசு, சத்துணவுத் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 163 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்வு கிடையாது.

PREV
17
திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு: 163 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…

தமிழ்நாடு அரசு, சத்துணவுத் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 163 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப உத்தேசித்துள்ளது. இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்த விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி, தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

27

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள்:

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். மேலும், தமிழில் சரளமாக பேசும் திறன் அவசியம்.

சம்பளம்: இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் ₹3,000 முதல் ₹9,000 வரை வழங்கப்படும்.

37
Anganwadi

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

  • பொது மற்றும் தாழ்த்தப்பட்ட (SC) பிரிவினர்: 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • பழங்குடியினர்: 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்: 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
47

விண்ணப்பக் கட்டணம்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.

 

தேர்வு முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் தகுதியின் அடிப்படையில், தகுதியானவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

 

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பம் சமர்ப்பிக்கத் துவங்கும் நாள்: 11.04.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 26.04.2025, மாலை 5.45 மணி வரை
57

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தினை https://tiruvarur.nic.in/  என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய ஆவணங்களின் நகல்களுடன், தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் மட்டுமே நேரடையாகச் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

67

தமிழக அரசு அங்கன்வாடி பணியிடங்களுக்கான அரசாணை

 CLICK HERE

அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம்

CLICK HERE 

குறு அங்கன்வாடி பணியாளர் விண்ணப்ப படிவம்

CLICK HERE

அங்கன்வாடி உதவியாளர் விண்ணப்ப படிவம்

CLICK HERE

CDPO Address

CLICK HERE

அதிகாரப்பூர்வ இணையதளம்

CLICK HERE

77

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள்:

  • பள்ளி மாற்றுச் சான்றிதழ்
  • SSLC மதிப்பெண் சான்றிதழ்
  • குடும்ப அட்டை
  • இருப்பிடச் சான்று
  • ஆதார் அட்டை
  • சாதிச் சான்றிதழ்
  • விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ் (பொருந்தினால்)
  • மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (பொருந்தினால்)

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இதையும் படிங்க:

அங்கன்வாடி வேலைவாய்ப்பு: சொந்த ஊரிலே வேலை ! விண்ணபிப்பது எப்படி? முழு விவரம்

சென்னை அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025: 308 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…

கள்ளக்குறிச்சியில் அங்கன்வாடி வேலை வாய்ப்பு! 10th, 12th முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

தூத்துக்குடியில் அங்கன்வாடி வேலைவாய்ப்புகள்: சொந்த ஊரிலே வேலை! உடனே விண்ணப்பிக்கவும்…

Read more Photos on
click me!

Recommended Stories