உங்களது தொழிலில் கோடி ரூபாய் சாம்பாதிக்க ஆசையா? தமிழக அரசின் டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி

Published : Mar 27, 2025, 06:00 PM ISTUpdated : Mar 27, 2025, 06:09 PM IST

மின்னணு சந்தைப்படுத்தல் (Digital Marketing) குறித்த 3 நாள் பயிற்சி! உங்கள் வணிக வளர்ச்சிக்கான ரகசியங்கள், கருவிகள் மற்றும் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

PREV
16
உங்களது தொழிலில் கோடி ரூபாய் சாம்பாதிக்க ஆசையா? தமிழக அரசின் டிஜிட்டல் மார்கெட்டிங் பயிற்சி

தொழில் முனைவோர்களே! உங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒரு அபூர்வ வாய்ப்பு! தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், டிஜிட்டல் யுகத்தின் அதிமுக்கிய ஆயுதமான மின்னணு சந்தைப்படுத்தலின் (Digital Marketing) சூட்சுமங்களை கற்றுத்தர ஒரு பிரம்மாண்டமான மூன்று நாள் பயிற்சி பட்டறையை சென்னையில் நடத்தவுள்ளது.

வரும் 07.04.2025 முதல் 09.04.2025 வரை, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ள இந்த பயிற்சி, உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

26

இந்த பயிற்சி பட்டறையில் உங்களுக்கு காத்திருக்கும் பொக்கிஷங்கள்:

சந்தைப்படுத்தலின் அடித்தளம்: கோட்டை கட்டுவதற்கு முன் பலமான அஸ்திவாரம்! வணிக சந்தைப்படுத்தலின் அடிப்படை கோட்பாடுகள் என்ன? உங்கள் இலக்கு வாடிக்கையாளர்களை எப்படி அடையாளம் காண்பது? சரியான சந்தைப்படுத்தல் உத்திகளை எப்படி வகுப்பது? போன்ற அஸ்திவாரமான விஷயங்களை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.

வளர்ச்சிக்கான மந்திர சூத்திரம்: லாபத்தை பெருக்குவது எப்படி? உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான பொருளாதார காரணிகளை (Unit Economics) ஆழமாக ஆராய்ந்து, லாபத்தை பன்மடங்கு பெருக்குவதற்கான வழிகளை கண்டறியலாம்.

இதையும் படிங்க:  நல்ல வருவாய் தரும் டாப் 7 தொழில் வாய்ப்புகள்

 

36

வெற்றியை அளவிடும் கருவிகள்: உங்கள் வணிகத்தின் இதயத்துடிப்பு! உங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிகளின் வெற்றியை துல்லியமாக அளவிட உதவும் முக்கிய அளவீடுகள் (Key Metrics) என்னென்ன? அவற்றை எப்படி புரிந்துகொண்டு சரியான முடிவுகளை எடுப்பது? உங்கள் வணிகத்தின் முன்னேற்றத்தை நீங்களே கண்காணிக்கலாம்!

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் புனல்: விற்பனையை அதிகரிக்கும் ரகசியம்! அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்து, அவர்களை உங்கள் loyal வாடிக்கையாளர்களாக மாற்றும் சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் புனலை (Marketing Funnel) எப்படி உருவாக்குவது? விற்பனையை அதிகரிக்க இது ஒரு சூப்பர் டெக்னிக்!

46

டிஜிட்டல் உலகின் இரகசியங்கள்: இணையத்தை உங்கள் கையில் ஆட்டுங்கள்! மின்னணு சந்தைப்படுத்தலின் உள்ளே ஒளிந்திருக்கும் வெற்றி ரகசியங்கள் என்னென்ன? சமூக ஊடகங்களின் பலம், தேடுபொறி மேம்படுத்தலின் (SEO) முக்கியத்துவம், மின்னஞ்சல் சந்தைப்படுத்தலின் தாக்கம் என டிஜிட்டல் உலகின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.

வெற்றிக்கான ஆயுதங்கள்: உங்கள் கையில் டிஜிட்டல் கருவிகள்! டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் வெற்றி பெற உதவும் அதிநவீன கருவிகள் மற்றும் தந்திரங்கள் என்னென்ன? அவற்றை எப்படி திறமையாக பயன்படுத்துவது? உங்கள் போட்டியாளர்களை தூக்கி சாப்பிடும் உத்திகள் உங்களுக்காக காத்திருக்கின்றன!

56

உதாரண கதைகள்: வெற்றியாளர்களின் பக்கங்கள்! வெற்றிகரமான நிறுவனங்கள் மின்னணு சந்தைப்படுத்தலை எப்படி பயன்படுத்தி சாதித்துள்ளன என்ற சுவாரஸ்யமான நிகழ்வு ஆய்வுகள் (Case Studies) உங்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

இந்த பயிற்சி பற்றிய மேலதிக தகவல்களை நீங்கள் www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் சந்தேகங்கள் மற்றும் முன்பதிவு குறித்த விவரங்களுக்கு, அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை), காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

66

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.

 தொலைபேசி எண்கள்: 9360221280 / 9543773337.

இதையும் படிங்க:  வெளிநாட்டில் வேலை செய்ய ஆசையா? அபுதாபியில் இந்தியர்களுக்கான தேவை 25% அதிகரிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories