என்ஜினியரிங் படித்தவர்களுக்கு ரூ.1,12,400 சம்பளத்துடன் அரசு வேலைவாய்ப்பு!

தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் காலியாக உள்ள 36 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் https://www.nal.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

CSIR NAL Recruitment: 36 Job Openings Announced, Salary Up to Rs. 1,12,400 sgb
CSIR-NAL Technical Assistant Recruitment 2025

தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகம்:

தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகத்தில் காலியாக உள்ள 36 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் https://www.nal.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

CSIR NAL Recruitment: 36 Job Openings Announced, Salary Up to Rs. 1,12,400 sgb
CSIR-NAL Technical Assistant

காலிப் பணியிடங்கள்:

சி.எஸ்.ஐ.ஆர். தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகம் (CSIR-NAL) ஓர் மத்திய அரசு நிறுவனமாகும். அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்நிறுவனத்தில் 36 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.


NAL Recruitment 2025

கல்வித் தகுதி:

NAL நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்குத் தொடர்புடைய பொறியியல் துறைகளில்  டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பணி அனுபவத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.

NAL Technical Assistant Jobs 2025

வயது வரம்பு:

NAL தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 11.04.2025 அன்று 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள், PwBD மற்றும் EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பு தளர்வு உண்டு. முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் அரசு கொள்கையின்படி தளர்வு கிடைக்கும்.

CSIR-NAL vacancy 2025

CSIR-NAL தொழில்நுட்ப உதவியாளரைத் தேர்வு செய்ய போட்டி எழுத்துத் தேர்வு, வர்த்தக சோதனை தேர்வு ஆகியவை நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகும் பட்சத்தில் மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் கிடைக்கும்.

Technical Assistant Post in CSIR-NAL

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் NAL வலைத்தளத்திற்கு (https://www.nal.res.in/) சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 11.04.2025 மாலை 05.00 மணிக்கு முடிவடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெண்கள், ST/SC பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு குறித்து கூடுதல் விவரங்களை அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.

https://www.nal.res.in/sites/default/files/inline-files/Final%20ADVT.%20Group%20III%20%20NAL%20%5B27.2.25%5D.pdf

Latest Videos

vuukle one pixel image
click me!