Job Alert: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.70 ஆயிரம் சம்பளம்.! 10 நாட்களுக்குள் விண்ணப்பித்தால் அரசு வேலை.!

Published : Nov 10, 2025, 08:02 AM IST

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 80 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். 

PREV
14
8ஆம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கே அரசு வேலை

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் தற்போது 8ஆம் வகுப்பு தகுதி பெற்றவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வாய்ப்பு அலுவலக உதவியாளர், அலுவலக காவலர் மற்றும் ஓட்டுநர் போன்ற பல்வேறு பணியிடங்களை உள்ளடக்கியதாகும். மொத்தம் 80 காலியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட உள்ளன.  கோவையில் 18 இடங்கள், தஞ்சாவூரில் 31, வேலூரில் 5, கடலூரில் 9, திருப்பூர், செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம், திருச்சியில் 8, தூத்துக்குடியில் 2 மற்றும் நாகர்கோவிலில் 5 இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
தகுதி இதுதான்.!

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் பதவிக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவச் சான்று அவசியம். விண்ணப்பிக்கும் நபர் 01.07.2025 தேதியின்படி 35 வயதை கடந்திருக்கக் கூடாது.

34
சம்பளம் மற்றும் தேர்வு முறை

அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணிக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும். ஓட்டுநர் பணிக்கு அதிகபட்சமாக ரூ.71,900 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நியமனம் தற்காலிகமானது. தேவையெனில் பணிநியமனத்தை ரத்து செய்யும் அதிகாரம் கண்காணிப்பு பொறியாளருக்கு உண்டு.

44
விண்ணப்பிக்கும் முறை

மாவட்ட இணையதளங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் நவம்பர் 20, 2025க்குள் சென்று சேர வேண்டும். இந்த வேலைவாய்ப்பு, குறைந்த கல்வித்தகுதியுடன் அரசு துறையில் உயர்ந்த சம்பளம் பெறும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories