Job Vacancy: 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் அரசு வேலை.! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! மறந்துடாதீங்க.!

Published : Nov 10, 2025, 06:47 AM IST

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், 'உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்' பதவிக்கு தற்காலிக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு மற்றும் கணினி பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

PREV
14
அரசு வேலை காத்திருக்கு உங்களுக்கு.!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காலி பணியிடம் தொடர்பாக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுவில்  "உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர்” என்ற பதவிக்கான பணியிடம் தற்போது காலியாக உள்ளது. இந்த வேலை தற்காலிக நியமனம் அடிப்படையில் வழங்கப்படும்.

24
12 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்.!

காலிபணியிடம் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ளள நிலையில், அதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தாலே போதும் எனவும் அதிகபட்ச வயது வரம்பு 42 எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

காலியிடங்கள்: 1 

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு மேல்நிலை தேர்ச்சி, கணினி கல்வியில் பட்டயப்படிப்பு ஆகியவை கட்டாயம். 

வயது வரம்பு: அதிகபட்சம் 42 வயது வரை விண்ணப்பிக்கலாம். 

34
சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சம்பளம்: மாதம் ரூ.11,916 வழங்கப்படும். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் https://perambalur.nic.In என்ற இணையதளத்தில் இருந்து இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா வளாகம் எண்: 106F/7, தரைத்தளம், அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் – 621212.

44
விண்ணப்பிக்கும் முறை இதுதான்.!

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா வளாகம் எண்: 106F/7, தரைத்தளம், அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் – 621212.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2025

12ஆம் வகுப்பு தகுதியுடன் அரசு பணியில் சேர விரும்பும் நபர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. நேர்முகத் தேர்வில் சிறந்து விளங்கினால், நிரந்தர பணியிடத்திற்கான வாய்ப்புகளும் திறக்கப்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories