வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வது ஒரு பெரிய முதலீடு. ஆனால், பட்டத்தின் பெயரை விட, AI அறிவு, இன்டர்ன்ஷிப் அனுபவம், சமூகத் திறன்கள் போன்ற நிஜமான திறமைகளுக்கே வேலையளிப்பவர்கள் முக்கியத்துவம் தருகின்றனர்.
வெளிநாட்டில் உயர்கல்வி பயில்வது என்பது ஒருவருடைய வாழ்க்கையையும், கரியரையும் மாற்றக்கூடிய ஒரு மிகப்பெரிய முதலீடு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் 'பெயர்' மட்டுமே உங்களுக்குப் பெரிய வேலையைத் தந்துவிடாது. வேலையளிப்பவர்கள் இப்போது பட்டங்களை விட, மாணவர்களின் நிஜமான திறமைகளுக்கே (Skills) அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தங்களின் முதலீட்டிற்கான பலனை (ROI) முழுமையாகப் பெற, வளர்த்துக் கொள்ள வேண்டிய 5 முக்கியமான தகுதிகள் குறித்து நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
26
AI மற்றும் டேட்டா அறிவு
உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) அறிக்கையின்படி, பகுப்பாய்வு சிந்தனை (Analytical Thinking) மற்றும் AI சார்ந்த திறன்களுக்கே எதிர்காலத்தில் அதிக மவுசு இருக்கும்.
மாணவர்கள் வெறும் தியரியை மட்டும் படிக்காமல், AI கருவிகளைப் பயன்படுத்தவும் (Prompting), தரவுகளைப் புரிந்துகொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும். இது வேலை வாய்ப்பை பல மடங்கு அதிகரிக்கும்.
36
இன்டர்ன்ஷிப் மற்றும் நேரடி அனுபவம்
2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, இன்டர்ன்ஷிப் அனுபவம் உள்ள மாணவர்களுக்கு வேலைக்கான நேர்காணல் அழைப்பு வருவதற்கான வாய்ப்பு 12.6% அதிகமாக உள்ளது.
படிக்கும்போதே பகுதிநேர வேலைகள், பெய்டு இன்டர்ன்ஷிப் (Paid Internship) அல்லது ஆராய்ச்சித் திட்டங்களில் ஈடுபடுவது உங்கள் பட்டப்படிப்பை ஒரு அனுபவமாக மாற்றும்.
தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், ஒரு குழுவை வழிநடத்தும் தலைமைப் பண்பு, பேச்சுத்திறன் மற்றும் பிறருடன் இணைந்து பணியாற்றும் திறனுக்கு (Teamwork) எப்போதும் அதிக சம்பளம் உண்டு.
குழு விவாதங்கள் மற்றும் மேடைப் பேச்சுகளில் பங்கேற்பது மாணவர்களின் 'Social Fluency'-யை அதிகரிக்கும்.
56
உலகளாவிய தொடர்புகள்
வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் உங்கள் மதிப்பெண்களை விட, நீங்கள் வைத்திருக்கும் தொடர்புகள் (Weak Ties) மூலமாகவே அதிகம் கிடைக்கின்றன.
முன்னாள் மாணவர்கள் (Alumni), பேராசிரியர்கள் மற்றும் லிங்க்டுஇன் (LinkedIn) மூலமாகப் புதிய நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம்.
66
சூழ்நிலைக்கு ஏற்ப மாறுதல்
வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் தங்கிப் படிப்பது மாணவர்களின் சிக்கல் தீர்க்கும் திறனை வளர்க்கிறது. பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களுடன் பழகும் போது கிடைக்கும் அனுபவத்தை, நேர்காணலின் போது திறமையாக வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
இது குறித்து IDP எஜுகேஷன் நிறுவனத்தின் மண்டல இயக்குநர் பியூஷ் குமார் கூறுகையில், "சர்வதேச பட்டப்படிப்பு என்பது உங்கள் எதிர்காலத்திற்கான முதலீடு. அதிக பலனைப் பெற, சந்தையில் டிமாண்ட் உள்ள படிப்புகளைத் தேர்வு செய்வதுடன், படிக்கும்போதே இன்டர்ன்ஷிப் மற்றும் பகுதிநேர வேலைகள் மூலம் அனுபவம் பெறுவது உங்களைப் போட்டி நிறைந்த உலகில் தனித்துக்காட்டும்," எனத் தெரிவித்தார்.