சவுதி அரேபியா அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிப்ரவரி 15 முதல் 18 வரை நேர்காணல் நடைபெறும். தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சவுதி அரேபிய அமைச்சகத்தில் வேலை.! கொட்டும் சம்பளம்
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் படிப்பை முடித்துவிட்டு லட்டசக்கணக்கானோர் வேலை தேடி வருகிறார்கள். அந்த வகையில் அரசு பணியில் இணைய விருப்பம் உள்ளவர்கள் அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதி வருகிறார்கள். மேலும் தனியார் துறையில் இணைய விருப்பம் உள்ளவர்களுக்காகவும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பை நடத்தி வருகிறது. மேலும் சொந்த தொழில் செய்ய திட்டமிடுபவர்களுக்காக பயிற்சியும் வழங்கி கடன் உதவி போன்ற உதவிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
25
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு
மேலும் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க விரும்புவர்களுக்காக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் அவ்வப்போது அறிவிப்பு வெளியாகிறது. அதன் படி ஜெர்மனி, துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தையும் வெளியிட்டு வருகிறது.
மேலும் பணம் கட்டி ஏமாறுவதை தடுக்கும் வகையில் எந்த வித ஏஜெண்டும் இல்லாமல் தமிழக இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் அறிவிப்பு வெளியிடுகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது மருத்துவர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
35
அலோபதி மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய (Consultant/Specialist) அலோபதி மருத்துவர்களுக்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது. சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற (Consultant/Specialist) மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள்.
45
விண்ணப்பிக்க அழைப்பு
இவர்களுக்காண் நேர்காணல் வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பெங்களூரில் உள்ள 'THE LEELA PALACE ல் நடைபெற உள்ளது. மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம். விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவாங்கள் இந்நிறுவன வலைதளமான www.cmcmanpower.tn.gov.in ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
55
சம்பளம் எவ்வளவு.?
மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (What's App Number: 6379179200) (044-22505886/044-22502267) அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணி விவரம் தொடர்பாக விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதனமான www.omcmanpower.tn.gov.in நேரிடையாக பதிவு செய்து இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.