வேலை தேடும் இளைஞர்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்!

Published : Feb 02, 2025, 05:08 PM ISTUpdated : Feb 02, 2025, 05:19 PM IST

Job search tips: வேலை தேடும்போது திட்டமிட்ட அணுகுமுறை மிகவும் முக்கியமானது. தற்போதைய அதிகப் போட்டி நிறைந்த வேலைச் சந்தையில், சிறிய தவறுகூட உங்கள் வேலைவாய்ப்பைத் தடுக்கலாம். எனவே வேலை தேடுபவர்கள் மனதில் கொள்ளவேண்டிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

PREV
16
வேலை தேடும் இளைஞர்கள் செய்யக் கூடாத 5 தவறுகள்!
Job search tips

வேலை தேடும்போது திட்டமிட்ட அணுகுமுறை மிகவும் முக்கியமானது. தற்போதைய அதிகப் போட்டி நிறைந்த வேலைச் சந்தையில், சிறிய தவறுகூட உங்கள் வேலைவாய்ப்பைத் தடுக்கலாம். எனவே வேலை தேடுபவர்கள் மனதில் கொள்ளவேண்டிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

26
Applying indiscriminately

வேலை தேடும்போது ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பிக்க ஆர்வமாக இருக்கலாம். ஆனால் வேலைக்கு ஆட்களைத் தேர்வுசெய்யும்போது உண்மையான ஆர்வம் இருக்கிறதா என்பதைச் சோதிப்பார்கள். எனவே உங்கள் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க கடிதங்களை அனுப்பலாம். மேலும் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை உங்கள் நீண்ட காலப் பணி வாழ்க்கைக்கு ஒத்துப்போகுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

36
Not prioritising networking

நூற்றுக்கணக்கான வாய்ப்புகளை ஜாப் போர்டல்கள் வழங்குகின்றன. இருப்பினும், அது மட்டும் பணியமர்த்தப்படுவதற்கான ஒரே வழி அல்ல. ஒரு சில வேலை வாய்ப்புகள் ஆன்லைன் போர்ட்டல்களில் இருக்காது. இங்குதான் நெட்வொர்க்கிங்கின் பங்கு வருகிறது. நிகழ்வுகளில் கலந்துகொள்வது, தொழில்துறை நிபுணர்களுடன் தொடர்புகொள்வது ஆகியவை தொழில்துறை நுண்ணறிவைப் பெறுவது எளிதாக இருக்கும்.

46
Undermining the value of online presence

சமூக ஊடகங்கள் உங்கள் வேடிக்கையான அனுபவங்களைப் பகிர்வதற்கும் மட்டும் அல்ல. உங்கள் ஆளுமை மற்றும் திறமையை மதிப்பிடுவதற்கு ஒரு முக்கியமான கருவியாக சோஷியல் மீடியாக மாறியுள்ளது. எனவே, உங்கள் LinkedIn சுயவிவரத்தை அப்டேட் செய்து வைத்திருப்பது அவசியம். பணியமர்த்துபவர்கள் சரிபார்ப்பதற்கு வசதியாக, உங்கள் கல்லூரியின் பெயர் போன்ற உங்களுடன் தொடர்புடைய தகவலைக் குறிப்பிடுங்கள்.

56
Not proofreading your application

உங்கள் முதல் விண்ணப்பமாக இருந்தாலும் சரி, பத்தாவது விண்ணப்பமாக இருந்தாலும் சரி, அதில் எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்வது முக்கியம். இதற்காக ரெஸ்யூம் மற்றும் விண்ணப்பதை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். இதை் தவிர்ப்பது, வேலைக்கு முயற்சி செய்வதில் நீங்கள் தீவிரமாக இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். பல திருத்தங்களுக்குப் பிறகும் தொடர்ந்து பிழைகள் இருப்பதாக உணர்ந்தால், ஒரு நண்பரிடம் ரெஸ்யூமைப் பார்க்கச் சொல்லவும். அவர் அதைச் செம்மைப்படுத்த உதவி செய்யலாம்.

66
Failing to follow-up

ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தவுடன் உங்கள் பொறுப்பு முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது. பலர் விண்ணப்பித்த பிறகு, அதைப் பின்தொடரத் தவறிவிட்டனர். இது ஒரு வாய்ப்பை இழக்க வழிவகுக்கும். விண்ணப்பத்தின் நிலையைப் பின்தொடர்வது உங்கள் விண்ணப்பத்தின் மீது கவனத்தை ஈர்க்கும். நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கும் நிலையில், பின்தொடர்வது உங்கள் விண்ணப்பம் கவனம் பெற உதவியாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories