ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்

Published : May 19, 2026, 02:28 PM IST

RBI Medical Consultant Vacancy 2026 : இந்திய ரிசர்வ் வங்கி மருத்துவ ஆலோசகர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. MBBS முடித்து 2 வருட அனுபவம் உள்ளவர்கள் ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம்.

PREV
15
ரிசர்வ் வங்கியில் வேலை

இந்தியாவில் அரசு வேலைக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. குறிப்பாக “நல்ல சம்பளத்துடன் மதிப்புள்ள வேலை வேண்டும்” என்று எதிர்பார்த்து காத்திருக்கும் மருத்துவர்களுக்கு இந்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

25
மருத்துவ ஆலோசகர் வேலை

இந்த வேலைவாய்ப்பு சாதாரண பணியமர்த்தல் அல்ல. இந்தியாவின் மிக முக்கியமான நிதி நிறுவனங்களில் ஒன்றான ஆர்பிஐ-யில் "மருத்துவ ஆலோசகர்" பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. குவஹாத்தியில் பணிபுரிய வேண்டிய இந்த பணி தொடக்கத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பின்னர் பணி காலம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 வரை சம்பளம் வழங்கப்படுவது இளைஞர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

35
விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க MBBS பட்டம் கட்டாயம். இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரித்த கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொது மருத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அதோடு, சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 வருட அனுபவம் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

45
மருத்துவர் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அடுத்தகட்ட செயல்முறைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
விண்ணப்பிக்க கடைசி தேதி

இந்த வேலைவாய்ப்பின் முக்கிய அம்சம், அரசு அமைப்பில் பணியாற்றும் அனுபவத்துடன் நல்ல வருமானமும் கிடைப்பதுதான். தற்போது தனியார் மருத்துவ துறையில் பணிபுரியும் பல இளைஞர்கள் கூட ஆர்பிஐ போன்ற மத்திய அமைப்புகளில் வேலை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூன் 16 விண்ணப்பிக்க கடைசி நாள், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு வட்டாரங்கள் அறிவுறுத்துகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories