Post Office Insurance Agent Job
போஸ்ட் ஆபிஸ் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. குறைந்தது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
சுய தொழில் செய்பவர்கள், இதற்கு முன் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக வேலை செய்த அனுபவம் உள்ளவர்கள் அங்கன்வாடி, மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழுகளின் உறுப்பினர்கள், முன்னாள் ராணுவப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்பட அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆயுள் காப்பீட்டுத் துறையில் முன் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில் தேர்ச்சி, வசிக்கும் பகுதியைப் பற்றிய நன்றாக அறிந்திருப்பது ஆகிய தகுதிகள் இருந்தால் இந்த வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம்.
முக்கியமான இரண்டு நிபந்தனைகள் உள்ளன. சென்னை மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். வேறு காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் முகவராக இருப்பவர்கள் போஸ்ட் ஆபிஸ் ஆயுள் காப்பீட்டு முகவராக முடியாது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜனவரி 4ஆம் தேதி காலை 10.30 மணி முதல் ஆயுள் காப்பீட்டு முகவர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெறும். மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வயது மற்றும் முகவரி சான்றுகள், கல்வித்தகுதி சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் 2 நகல்களை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வாகும் நபர்கள் ரூ.5000 மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரம் [NSC] அல்லது கிசான் விகாஸ் பத்திரம் [KVP] பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும். வேலையை சேர்ந்த பிறகு பிடித்துக் கொடுக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வருமானம் கிடைக்கும்.