Job: கண்டிப்பா இது ஜாக்பாட்தான்.! தேர்வு கிடையாது... நேரிடை நியமனம்! ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்! தமிழக அரசின் மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பு.

Published : Jan 06, 2026, 07:11 AM IST

தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்  டென்டல் மெக்கானிக் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு இன்றி, 10, 12 மற்றும் டிப்ளோமா மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த நேரடி நியமனம் நடைபெறுகிறது. 

PREV
15
லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பல் மருத்துவத் துறையில் மிக முக்கியப் பங்களிப்பை வழங்கும் 'டென்டல் மெக்கானிக்' பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதனைப் பயன்படுத்தி அரசுப் பணியில் சேர நல்லதொரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

25
காலிப்பணியிட விவரங்கள்

இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 43 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை இட ஒதுக்கீடு விதிகளின்படி பல்வேறு பிரிவினருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

மேல்நிலைக்கல்வி

12-ம் வகுப்பில் (HSC) அறிவியல் பாடப்பிரிவை எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்பக் கல்வி

 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 2 ஆண்டுகள் 'டென்டல் மெக்கானிக்' (Dental Mechanic Course) டிப்ளோமா படிப்பை முடித்திருக்க வேண்டும்.தமிழ்நாடு பல் மருத்துவக் கவுன்சிலில் (Tamil Nadu Dental Council) முறையாகப் பதிவு செய்திருப்பது அவசியம்.

35
தேர்வு செய்யப்படும் முறை

இந்த வேலைவாய்ப்பிற்கு எழுத்துத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் கல்விப் பயின்ற காலத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே (Weightage of Marks) தேர்வு செய்யப்படுவார்கள்.

  • 10-ம் வகுப்பு மதிப்பெண்கள்
  • 12-ம் வகுப்பு மதிப்பெண்கள்
  • டென்டல் மெக்கானிக் டிப்ளோமா மதிப்பெண்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தரவரிசைப் பட்டியல் (Merit List) தயார் செய்யப்படும்.
45
ஊதிய விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி சிறப்பான ஊதியம் வழங்கப்படும். மாதம் ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை (Level-11) மற்றும் இதர படிகள் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையானவை

புகைப்படம், கையெழுத்து மற்றும் கல்விச் சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.01.2026.

55
இளைஞர்களுக்கு செம்ம வாய்ப்பு

மருத்துவத்துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகப் பல் சீரமைப்பு மற்றும் செயற்கைப் பல் தயாரிப்பில் டென்டல் மெக்கானிக்குகளின் பங்கு மகத்தானது. எவ்வித தேர்வும் இன்றி மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் இந்த நேரடி நியமனம், தகுதியான இளைஞர்களுக்கு ஒரு பொற்கால வாய்ப்பாகும். தகுதியுள்ளவர்கள் கடைசி நேரத் தவிப்பைத் தவிர்க்க உடனே விண்ணப்பித்து அரசுப் பணியைப் பெற்றிட வாழ்த்துகள்.

Read more Photos on
click me!

Recommended Stories