ரூ.1 லட்சம் மாத சம்பளம்; 153 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இதுதான் கடைசி வாய்ப்பு!

First Published | Nov 5, 2024, 10:15 AM IST

என்எம்டிசி 153 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 10, 2024. காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் சம்பளங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

NMDC Recruitment 2024

அரசு துறை நிறுவனமான என்எம்டிசி (NNMC) ஒரு பெரிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கமர்ஷியல், சுற்றுச்சூழல், ஜியோ மற்றும் க்யூசி, சுரங்கம், சர்வே, கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், ஐஇ மற்றும் மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் மொத்தம் 153 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NMDC Careers

கல்வித் தகுதி, வயது போன்ற விவரங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 21 அக்டோபர் 2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி 10 நவம்பர் 2024 ஆகும். இந்தப் பதவிகளுக்கு nmdc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Latest Videos


NMDC Online Registration

காலியிடங்களானது கமர்ஷியல்- 4, ஜியோ மற்றும் கியூசி- 3, சுற்றுச்சூழல்- 1, சுரங்கம்- 56, சர்வே- 9, கெமிக்கல்- 4, எலக்ட்ரிக்கல்- 44, சிவில்- 9, ஐஇ- 3, மெக்கானிக்கல்- 20. பதவிக்கு ஏற்ப தகுதி தீர்மானிக்கப்படுகிறது. பட்டம்/ எம்பிஏ/ பிஜி/ மார்க்கெட்டிங்/ வெளிநாட்டு வர்த்தகம்/ விற்பனை சந்தைப்படுத்தல் அல்லது பொறியியல் டிப்ளமோ, சிஏ/ ஐசிஎம்ஏ முடித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.

NMDC Trainee Recruitment

விண்ணப்பக் கட்டணம் 250 ரூபாய். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்எம்டிசி ஊழியர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஆன்லைன் தேர்வு சிபிடி (கணினி அடிப்படையிலான தேர்வு), மேற்பார்வை திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Government Jobs

சம்பளத்தைப் பொறுத்தவரை முதல் 12 மாதங்கள் ரூ. 37,000 ஆக இருக்கும். மீதமுள்ள 6 மாதங்களுக்கு மாதம் ரூ.38,000. பயிற்சிக் காலம் முடிந்ததும், மாதம் ரூ.37000 முதல் ரூ.1,30,000 வரை சம்பளம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; ரூ.20,000 சம்பளம்! இந்திய ரயில்வேயில் வேலை!

click me!