தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. இந்து அறநிலையத்துறையில் காத்திருக்கும் வேலைகள்

First Published | Nov 4, 2024, 12:03 PM IST

சென்னை மார்கசகாயேஸ்வரர் கோவிலில் வாட்ச்மேன், திருவழகு, சுயம்பாகி உள்ளிட்ட 7 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆஃப்லைன் விண்ணப்ப செயல்முறை 03-11-2024 முதல் 27-11-2024 வரை நடைபெறும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNHRCE Recruitment 2024

தமிழ்நாட்டில் சென்னையில் வாட்ச்மேன், திருவழகு, சுயம்பாகி உள்ளிட்ட 7 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆஃப்லைன் விண்ணப்ப செயல்முறை 03-11-2024 அன்று தொடங்கி 27-11-2024 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மார்கசகாயேஸ்வரர் கோவிலில் நேர்காணல் மூலம் தேர்வு நடத்துகின்றனர்.

Tamilnadu Govt Jobs 2024

விண்ணப்பதாரர்கள் வேலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி வரம்புகள், வயது வரம்புகள், தேர்வு நடைமுறைகள் மற்றும் சம்பள தொகுப்புகளை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். சுயம்பாகி விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோவில் பிரசாதம் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.

Tap to resize

TN Govt Jobs 2024

மேளம் செட் விண்ணப்பதாரர்கள் இசை சம்பந்தப்பட்ட பாடத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். பகல் நேர காவலாளி விண்ணப்பதாரர்கள் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இரவு காவலர் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருவலகு விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Chennai Margasahayeswarar Temple

சம்பள விவரங்களை பொறுத்தவரை அடிப்படை சம்பளம் ரூ.10000 வரை இருக்கும். சுயம்பாகி மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை, மேளம் செட் மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை, பகல் நேர வாட்ச்மேன் மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை, இரவு காவலாளி மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை திருவலகு மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை இருக்கும்.

Chennai Margasahayeswarar Temple Recruitment 2024

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை சுயம்பாகி 18 முதல் 45 வயது வரை, மேளம் செட் 18 முதல் 45 ஆண்டுகள், பகல் நேர காவலாளி 18 முதல் 45 வயது வரை, இரவு காவலாளி 18 முதல் 45 வயது, திருவழகு 18 முதல் 45 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; ரூ.20,000 சம்பளம்! இந்திய ரயில்வேயில் வேலை!

Latest Videos

click me!