Job Vacancy: டிகிரி முடித்தால் போதும்! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை! மாதம் ரூ.85,920 வரை சம்பளம்!

First Published | Oct 24, 2024, 5:39 PM IST

Job Vacancy in Union Bank of India: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 200 காலி பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 13.11.2024.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றானது யூனியன் பேங்க் ஆப் இந்தியா. இந்த வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 8500 கிளைகள் உள்ளன. சுமார் 75,000 ஊழியர்களுடன் இயங்கி வரும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1500 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

காலியிடங்களின் எண்ணிக்கை: 

1,500 காலி பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 200 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

20 முதல் 30  வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் கீழ் காணும் பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

Tap to resize

கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் ரூ.175 ஆகும். 
விண்ணப்பிக்கும் போதே ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். 

மாத ஊதியம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் 85,920 வரை மாதம் சம்பளம் கிடைக்கும்.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் எண்ணிக்கையை பொறுத்து நேர்முகத்தேர்வு நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும். 

தேர்வு மையங்கள்: 

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோயில்/ கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

13.11.2024 அதாவது நவம்பர் 13ம் தேதி 

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து அறிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
 

Latest Videos

click me!