NCRTC Recruitment 2026-ன் கீழ் மொத்தம் 90 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Supervisor-I பணிக்கு 62 காலியிடங்களும், Junior Maintainer பணிக்கு 28 காலியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
Supervisor-I (Operations) பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து முழுநேர Engineering Degree அல்லது Engineering Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Supervisor-I (Electronics, Electrical, Mechanical மற்றும் Civil) பணிகளுக்கு, சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
அதேபோல், Junior Maintainer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவில் ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான குறிப்பிட்ட கல்வித் தகுதியை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.