இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் தோராயமான எண்ணிக்கையையும் இந்தப் புத்தகம் பட்டியலிட்டுள்ளது:
• உச்ச நீதிமன்றம்: 81,000 வழக்குகள்
• உயர் நீதிமன்றங்கள்: 62,40,000 வழக்குகள்
• மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள்: 4,70,00,000 வழக்குகள் (4.7 கோடி)
"ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இத்தகைய ஊழல்கள், நீதியைப் பெறுவதில் பெரிய தடையை ஏற்படுத்துகின்றன" என்றும் இந்தப் பாடம் விளக்குகிறது. எனினும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் அரசும் நீதித்துறையும் தொடர்ந்து முயற்சித்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.