அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழம் அல்லது நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களும், SC/ST/PWBD மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தேர்ச்சி மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
டெவலப்மெண்ட் அசிஸ்டண்ட் (இந்தி) (குரூப் 'பி') பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் ஆங்கிலம்/இந்தி வழியில் இளங்கலைப் பட்டம் பெற்று, இந்தி மற்றும் ஆங்கிலத்தை கட்டாய/விருப்பப் பாடங்களாகக் கொண்டிருக்க வேண்டும். இதில் பொது பிரிவினர் 50% மதிப்பெண்களும், SC/ST/PWBD/EXS பிரிவினர் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.