Job Alert: டிகிரி முடித்துள்ளீர்களா?! ரூ.89 ஆயிரம் சம்பளம் தர காத்திருக்கு நபார்டு வங்கி.! சட்டு புட்டுன்னு அப்ளிகேஷன் போடுங்க.!

Published : Nov 10, 2025, 09:25 AM IST

தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியான நபார்டில் (NABARD) 91 உதவி மேலாளர் (Grade A) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பட்டதாரிகள் இந்த அரசு வேலைக்கு நவம்பர் 30, 2025 வரை www.nabard.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

PREV
14
அட்டகாசமான பணி வாய்ப்பு

நபார்டு (NABARD) எனப்படும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் உதவி மேலாளர் (Grade A) பணியிடங்களுக்கான பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 91 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு சிறந்த அரசாங்க வேலை வாய்ப்பாகும்.

இந்த பணியிடங்கள் பல துறைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது பொது பிரிவு 48 இடங்கள், கணக்காளர் (CA) 4 இடங்கள், கம்பெனி செக்ரட்டரி 2 இடங்கள், நிதி பிரிவு 5 இடங்கள், கணினி தொழில்நுட்பம் 10 இடங்கள், பொருளியல் 2 இடங்கள் மற்றும் சட்டம் தொடர்பான பிரிவில் 2 இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24
60% மதிப்பெண்கள் அவசியம்.!

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவுக்கான பணிக்காக குறைந்தது 60% மதிப்பெண்கள் அவசியம். முதுகலை பட்டம் (MBA, PGDM போன்றவை) பெற்றவர்கள் 55% மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்கலாம். பொறியியல், பொருளியல் போன்ற துறைகளுக்கு சம்பந்தப்பட்ட கல்வித் தகுதிகள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சம்பள விவரம்: தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாதம் ₹44,500 முதல் ₹89,150 வரை ஊதியம் பெறுவார்கள். அதோடு, அலவன்ஸ் மற்றும் பிற நலன்களும் வழங்கப்படும்.

34
விண்ணப்பிக்க வேண்டிய தேதி

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளின்படி ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.

விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினர் ₹800, ஆனால் SC/ST மற்றும் மாற்றுத் திறனாளிகள் ₹150 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: ஆன்லைனில் விண்ணப்பங்கள் 8 நவம்பர் 2025 முதல் தொடங்குகிறது. கடைசி தேதி 30 நவம்பர் 2025 ஆகும். அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.nabard.org வழியாக விண்ணப்பிக்கலாம்.

44
இளைஞர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பு

இந்த வேலை வாய்ப்பு, குறிப்பாக வங்கி மற்றும் நிர்வாகத் துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பம். சிறந்த கல்வித் தகுதியும், உறுதியான முயற்சியுமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவி நிலையான அரசு வேலை வாய்ப்புடன் நிதி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதால், இது ஒரு நம்பகமான மற்றும் எதிர்காலம் உறுதியான வேலைவாய்ப்பு எனக் கூறலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories